தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கம் (CODISSIA - Coimbatore District Small Industries Association) என்றழைக்கப்படும் கொடீசியா தொழிற்சாலைப் பூங்காவை கோயம்புத்தூரில் துவக்கி வைத்தார். 1969-ஆம் ஆண்டில் சிறு தொழிற்சாலை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு இந்த வருடம் தனது 50-வது ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடுகின்றது.
தொழிற்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான K. ஞான தேசிகனை தமிழக அரசு, தமிழ்நாடு நில விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தின் (Real Estate Regulatory Authority - RERA) தலைவராக நியமித்திருக்கின்றது.
இமாச்சலப் பிரதேசத்தின் யுனா மாவட்டத்தில் உள்ள சிங்ஹைன் கிராமத்தில் கிரெமிகா உணவுப் பூங்கா நிறுவனம் என்பதை மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் துவக்கி வைத்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் முதல் மிகப்பெரும் உணவுப் பூங்கா இதுவாகும்.
இருதரப்பு வர்த்தகத்தில் வரி அல்லாத தடைகள் மற்றும் பல்வேறு இருதரப்பு விவகாரங்களின் மீது விவாதத்தை ஏற்படுத்திட இந்திய - நேபாள வர்த்தக உடன்படிக்கையை மதிப்பிடும் 2-வது கூடுதல் செயலாளர் மட்டத்திலான சந்திப்பு இரண்டு நாள் சந்திப்பாக நேபாளத்தின் போக்ஹரா நகரில் நடத்தப்பட்டது.
இந்தியா - நார்வே கடல் மாசுக் கட்டுப்பாட்டு முயற்சியை ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் நார்வேயும் ஒரு நோக்கத்திற்கான கடிதத்தில் கையெழுத்திட்டன.
தென் ஆப்பிரிக்காவிற்கான இந்தியாவின் உயர் ஆணையராக தற்சமயம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ருச்சிரா காம்போஜ் பூடானிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டார்.
ஜெனீவா நகரம் சமீபத்திய ஒரு விவாதத்திற்குள்ளான மதச்சார்பின்மைச் சட்டத்தின் மீது அதன் குடியிருப்பாளர்கள் 55 சதவிகிதம் அதற்கு ஆதரவாக வாக்களித்ததற்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்திருக்கின்றது.