மூத்த நிர்வாக அதிகாரி பிரமோத் சந்திர மோடி என்பவர் வருமானவரித் துறைக்கான உயர்மட்ட கொள்கை வடிவமைப்பு அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரிய மன்றத்தின் (Central Board of Direct Taxes – CBDT) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார நபருமான முகேஷ் அம்பானி 437 கோடி ரூபாய் நன்கொடையுடன் ஹரூன் இந்தியா மனிதநேயப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் செயல்பாட்டிற்கு வந்த ரஷ்யாவின் பாரா தடகள வீரர்கள் மீதான தடைகளை சில நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச பாராலிம்பிக்ஸ் குழு தளர்த்தியுள்ளது.