இந்தியப் பிரதமர் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள டீசல் இயந்திரத் தொழிற்சாலையில் (Diesel Locomotive Works - DLW) டீசல் எரிபொருளிலிருந்து மின்சாரத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட முதலாவது இரயில் என்ஜினை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களையும் சேர்ந்த 150 மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில உதவும் பெருமைமிகு மகாத்மா காந்தி உதவித் தொகை வழங்கப் பெற்றனர்.
தேசிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியன இந்திய அரசியலமைப்பின் விதி 18(1) என்பதன் கீழ் உள்ள விளக்கத்திற்குப் பொருந்துவதால் அவற்றை விருது பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன் அடைமொழியாகவோ துணை மொழியாகவோ பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் கங்காராம் அஹிர் தெரிவித்திருக்கின்றார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு புது தில்லியில் SWAYATT எனும் அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.
இது அரசின் மின்னணு வணிகச் சந்தையின் (Government e Marketplace - GeM) மீது மின்னணுப் பரிமாற்றங்கள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான துவக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும்.