TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 20 , 2017 2402 days 804 0
  • ஏ.என்.ஐ டெக்னாலஜிஸால் இயக்கப்படும் ஓலா நிறுவனமானது நிகழ்நிலை உணவு விநியோக தொடக்க நிறுவனமான ஃபுட் பாண்டா இந்தியா நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான ஜெர்மனியைச் சார்ந்த டெலிவரி ஹீரோ குரூப்பிடமிருந்து அனைத்து பங்கு ஒப்பந்தத்தின் மூலம் அறிவிக்கப்படாத தொகைக்கு கையகப்படுத்தியது. மேலும் ஃபுட்பாண்டா நிறுவனத்தின் இந்திய வணிகத்தில் 200 மில்லியன் டாலர்களை அது உட்செலுத்த உள்ளது.
  • வாகன தொழிலில் திறன் இந்தியா இலக்கை (Skill India Mission) ஆதரிக்கும் பொருட்டு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகமும் மாருதி சுசூகி இந்தியா லிட் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • இந்த தளர் தன்மை கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது திறன் இந்தியா இலக்கின் கீழ் வாகனங்கள் மற்றும் உற்பத்தி தொழில் சார்ந்த வர்த்தகங்களில் அதிக வேலை வாய்ப்பினை வழங்கும் நோக்கம் கொண்டதாகும்.
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் பிற பிரச்சனைகளுக்கான ஆதரவை திரட்டுவதற்கு 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் சந்திப்பை இந்தியா நடத்தும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்