2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரின் 165-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்வாதார கைத்தறி நிதி விருதுகள், பூம்புகார் மாநில விருதுகள் மற்றும் நிதியியல் விருதுகள் ஆகியவற்றை பட்டு உற்பத்தி செய்யும் 3 விவசாயிகளுக்கு அளித்தார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (UPSC - Union Public Service Commission) 2019 ஆம் ஆண்டில் நடைபெறும் குடிமைப் பணித் தேர்வுகளிலிருந்து மேல்வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்கள் 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்திய அதிகாரியான சந்திரமௌலி இராமநாதனை யுக்திசார் மேலாண்மை, கொள்கை மற்றும் உடன்பாட்டுத் துறையின் (Department of Management Strategy, Policy and Compliance - DMSPC) முக்கியமான பதவிகளில் ஒன்றிற்கு நியமித்துள்ளது.
சவுதி அரேபியா சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் (International Solar Alliance - ISA) கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா தலைமையிலான இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பில் இணையும் 73வது நாடாக சவுதி அரேபியா உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் தற்பொழுது ISA-வில் 122 உறுப்பு நாடுகள் உள்ளன.