TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2019 1970 days 568 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, சென்னையில் தட்சிண பாரத இந்திப் பிரச்சார சபாவில் மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • பீகார் அரசு வேலைவாய்ப்பிலும் கல்வி நிலையங்களிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
  • மராத்தி பாஷா தின் மற்றும் மராத்தி பாஷா திவஸ் என்றும் அறியப்படும் மராத்தி மொழி தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி புகழ்பெற்ற மராத்தி கவிஞர் விஷ்ணு வர்மன் ஷிர்வத்கர் என்பவரது பிறந்த நாள் ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது.
  • தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்ப்புக் குறைபாட்டை அடையப் பெற்ற நோய் (AIDS - Acquired Immuno-deficiency Syndrome) மீதான தனது ஆராய்ச்சியின் கவனத்தை கைவிட்டு வரும் காலங்களில் புதிய பெயர் மாற்றத்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றது.
  • வாரணாசியில் உள்ள மன் மகாலில் பிரதமர் ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட ஆய்வு மையமாக இந்திய அகழ்வாராய்ச்சி மையத்தின் கீழ் ஒரு மெய்நிகர் அனுபவம் கொண்ட அருங்காட்சியகத்தைத் துவக்கி வைத்தார்.
  • அரசு சாராக் குழு ஒன்றினால் வெளியிடப்பட்ட சிஸ்த் பாரத் பரப்புரை ஒழுக்கம், குடிமையியல் அறிவு, பணிவு, நல்லொழுக்கம் மற்றும் கண்ணியம் ஆகிய விழுமியங்களைப் பற்றி விழிப்புணர்வூட்டி இந்தியக் குடிமக்களின் நெறிமுறை குணாதிசயங்களை வலுப்படுத்த எண்ணுகின்றது. இது டாக்டர் அஞ்சலி குவாத்ராவின் பாதுகாப்புப் பயிற்சி முன்னெடுப்பு அமைப்பின் ஒரு முயற்சியாகும்.
  • இந்திய பிரதமர் தனது தென்கொரிய சுற்றுப் பயணத்தின் போது சியோல் நகரத்தில் இந்திய கொரிய ஸ்டார்ட் அப் மையத்தைத் துவக்கி வைத்தார்.
  • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நாக்பூரில், அனற் காற்று மீதான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை நடத்தியது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர் விருதினை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு இந்திய அணித் தலைவர் மன்ப்ரீத் சிங்கிற்கு வழங்கி கௌரவித்திருக்கின்றது.
    • பெண்கள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் லால்ரேம் சியாமி ஆண்டிற்கான எழுச்சி நட்சத்திர வீரர் விருதினை வென்றிருக்கின்றார்.
  • மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரயில் திருஷ்டி என்ற அறிவிப்புப் பலகையைத் துவக்கி வைத்தார்.
    • இது இந்திய இரயில்வேயில் உள்ள அனைத்து டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளையும் ஒருங்கிணைக்கும். மேலும் இது வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையையும் ஊக்குவிக்கும்.
  • உலக நீடித்த ஆற்றல் தினங்கள் என்பது இந்த துறையில் நடத்தப்படும் ஐரோப்பாவின் மிகப்பெரிய வருடாந்திர மாநாடுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டின் மாநாடு ஆஸ்திரியாவின் வெல்ஸ் நகரில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 01 வரை நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்