சென்னை 22.1 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றது. இது மூன்றாவது பெரிய கார்பன் உமிழ்வாக பட்டியலில் உள்ளது. முதலிடத்தில் டெல்லி 38.38 மில்லியன் டன்களுடனும் அதனைத் தொடர்ந்து மும்பையும் பட்டியலில் உள்ளன.
எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கிய இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
பதிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகும் இருக்கைகளைப் பதிவு செய்திடும் ஒரு புதிய வசதி ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி இணைய தளத்தில் இந்திய ரயில்வே துவங்கியிருக்கின்றது.
இந்த புதிய வசதியின்படி, இரயில் புறப்படத் துவங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக வெளியிடப்படும் இரண்டாவது பதிவுப் பட்டியல் வெளியான பிறகும் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும்.
வாகனங்கள் மூலம் மோதி விட்டு ஓடிப் போகும் விபத்துக்களுக்கான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான கோரிக்கைகளுக்கு நியாயமாக நிவாரணம் போய்ச் சேருவதை உறுதி செய்திட மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுத்திட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலாவது ‘P.V. நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும் வாழ்நாள் சாதனை விருது’ முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு தனது ஏற்றுமதியை ஈரானின் சாபஹார் துறைமுகம் வழியாக ஆரம்பித்து வைத்தது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்றுமதியே இந்தியாவிற்கு தனது பொருட்களை பாகிஸ்தானைத் தவிர்த்த வழியில் செய்யப்பட்டிருக்கின்ற முதலாவது ஏற்றுமதியாகும்.
அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒரு வருடத்திற்குள் இரண்டாவது முறையாக வியட்நாமின் தலைநகர் ஹனோயில் சந்தித்துக் கொண்டனர்.
2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சர்ப்ராஸ் அகமதுவிடம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் இர்பான் அன்சாரி ஊழல் அணுகுமுறையை மேற்கொண்டு அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் குழுமம் 10 வருடங்கள் அவருக்குத் தடை விதித்துள்ளது.
மத்திய வர்த்தகம், தொழிற்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மத்தியப் பிரதேசத்தின் போபாலிலும் அசாமின் ஜோர்ஹட்டிலும் தேசிய வடிவமைப்பு நிறுவனங்களைத் துவக்கி வைத்தார்.
இரண்டு நிறுவனங்களும் தொழிற்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனங்களாகும்.
மத்திய அமைச்சரவை டெல்லி – காசியாபாத் – மீரட் பெருவழிப் பாதையில் 82.15 கிலோமீட்டர் தூரத்திற்கு வட்டார விரைவுப் போக்குவரத்து அமைப்பை எற்படுத்திட ஒப்புதல் அளித்திருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்காக எமிசாட் எனப்படும் ஒரு மின்னணு உளவுத் துறை செயற்கைக் கோளை இஸ்ரோ அமைப்பு வெளியிட இருக்கின்றது.
பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற செஸ் விளையாட்டுக்கான கேன்ஸ் சர்வதேச ஓபன் டிராபியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குப்தா கோப்பையை வென்றார். இது அவரது முதல் தனிநபர் சர்வதேச சுற்றுப்பயண வெற்றியாகும். இவர் இத்தாலியின் பியர் லுகி பாசோவை வெற்றி கொண்டார்.
இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட நாட்டின் அரசியலமைப்பைச் சீர்திருத்துவதற்காக மியான்மர் ஒரு குழுவை அமைத்துள்ளது.