சுகாதாரம், அரசு மற்றும் சுய வேலைவாய்ப்பு தொழில் துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஊருணி என்ற அரசு சாரா அமைப்பால் விருதுகள் வழங்கப்பட்டன.
மார்ச் 02 அன்று இந்தியப் பிரதமர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை உள்ள காலத்தை கட்டுமான – தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்தார்.
அகில பாரதிய திகம்பர் ஜெயின் மகாசமிதியால் ஏற்படுத்தப்பட்ட பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கர் விருதினைப் பெறவிருக்கும் முதல் நபர் இந்திய விமானப் படையின் விங் கமாண்டரான அபிநந்தன் வர்த்தமான் ஆவார்.
ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உபேர் ஓட்டுநர்களுக்கு இலவச சுகாதார சேவைகளை அளிப்பதற்காக தேசிய சுகாதார ஆணையம் (NHA - National Health Authority) உபேர் என்ற பயணம் மேற்கொள்ளுவதற்கான செயலியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய அரசானது போராளிகளுடன் “மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்” என்ற காரணத்தின் அடிப்படையில் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை 5 வருடங்களுக்குத் தடை செய்துள்ளது.
கைபேசி அடையாள அட்டைகள் மற்றும் புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குதல் ஆகியவற்றிற்கு அடையாளச் சான்றாக ஆதாரை விருப்பப்படி பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் ஒரு அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டுக்களுக்கான மையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மையம் சமூகப் பதிவுகள் சட்டம், 1860-ன் கீழ் பதிவு செய்யப்படவிருக்கிறது.
இது குவாலியரின் மாற்றுத் திறனாளி விளையாட்டுகளுக்கான மையம் என்ற பெயரில் செயல்படவிருக்கிறது.