TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 22 , 2017 2528 days 885 0
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த நீதிபதி சுவதந்தர் குமார் ஓய்வு பெற்றதை அடுத்து இத்தீர்ப்பாயத்தின் தலைவராக (பொறுப்பு) நீதிபதி உமேஷ் தட்டாட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை உமேஷ் தட்டாட்ரியா இப்பதவியில் இருப்பார்.
  • 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரை அடுத்து இங்கிலாந்தின் ஓர் நகரில் மிகப்பெரும் விளையாட்டுப் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • அதிபர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பினை நீக்குவதற்கு உகாண்டா நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் பெருவாரியான அளவில் வாக்களித்துள்ளதால்  தற்போதைய அதிபரான யோவேரி முசெவேனி 6-வது முறையாக அதிபர் பதவியை கைக் கொள்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டோர் அதிபர் பதவிக்கு போட்டியிட இயலாது என்ற பழைய சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட முசெவேனி தகுதி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்