தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி அலுவலகத்தில் காவலர் அங்காடியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியானது போலீஸ் உணவகத்தில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களின் விவரங்கள் மற்றும் விலைப் பட்டியலை அளிக்கும்.
பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களின் (SHGs - self-help groups) தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததற்காக சிறந்த வங்கிக்கான விருது இந்தியன் வங்கிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற கலாச்சாரத்தில் இடம்பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக செங்கோட்டையில் “ஆசாதி கீ திவானி” அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
காண்டாமிருக இனங்களைப் பாதுகாப்பதற்காக “2019 ஆம் ஆண்டின் ஆசிய காண்டாமிருகங்கள் மீதான புது தில்லி உறுதி ஆவணத்தில்” இந்தியா, பூட்டான், நேபாளம், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது இரண்டாவது ஆசிய காண்டாமிருக வாழிட நாடுகளின் சந்திப்பின்போது கையெழுத்திடப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் தேசிய ஸ்டெம் (STEM – Science, Technology, Engineering and Math – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வி விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பதின்ம வயதினரான காவ்யா கோப்பரப்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கிலியோபிளஸ்டோமாவின் மேம்பட்ட சிகிச்சைகளுக்கு இவரது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
நிலநடுக்க அபாய மண்டலங்களைக் கண்டறிவதற்காகவும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா முழுவதும் 22 நிரந்தர புவியிடங்காட்டி (GPS - global positioning system) நிலையங்களை இந்தியப் புவியியல் அளவியல் துறையானது (GSI - Geological Survey of India) தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 அன்று உலக பாலியல் சுரண்டலுக்கெதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும்பாலும் காணப்படும் பாலியல் சுரண்டல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேக்கி சால் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று செனேகலின் அதிபராக இரண்டாவது முறையாகத் தோர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் தான் ஆற்றிய சேவைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான அலெஸ்டேர் கூக்கிற்கு நைட்வுட் விருது அதிகாரப் பூர்வமாக வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் இலண்டனில் உள்ள பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் II அரசியால் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
கிரிக்கெட்டிற்கு சேவையாற்றியதற்காக நைட்வுட் பட்டம் பெறும் 17-வது பிரிட்டிஷ் கிரிக்கெட் வீரர் இவராவார்.