சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்படும் என்று இந்தியப் பிரதமர் மார்ச் 06 அன்று அறிவித்துள்ளார்.
மார்ச் 06 அன்று தமிழக முதலமைச்சர் அம்மா சமுதாய வானொலியைத் தொடங்கினார்.
குறிப்பிட்ட வேளாண் பொருட்களுக்காக போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் (TMA - Transport and Marketing Assistance) உதவிக்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
16 RCEP (Regional Comprehensive Economic Partnership) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கம்போடியாவின் சியேம் ரீப்பில் நடைபெற்ற 7-வது RCEP அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC - International Criminal Court) 124-வது உறுப்பு நாடாக சேருவதற்கான ரோம் விதிக்கு மலேசியா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் பொது இயக்குனராக P.Y. ரமேஷை நியமிப்பதற்கான நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சீர்திருத்தக் கட்சியின் தலைவரான கஜா கல்லாஸ் எஸ்தோனியாவின் முதலாவது பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.