சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் - மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-CECRI / Central Electrochemical Research Institute) முதலாவது பெண் இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரான டாக்டர் என். கலைச் செல்வி உருவெடுத்துள்ளார்.
“இந்தியாவில் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி, மக்களாட்சி மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக” தனது பங்களிப்பை ஆற்றியதற்காக அமைதிப் பல்கலைக்கழகத்தினால் கௌரவ முனைவர் பட்டம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரான எம். வெங்கைய நாயுடுவுக்கு வழங்கப்பட்டது.
இவர் கோஸ்டா ரிக்காவின் தலைநகரான சன் ஜோஸில் பல்கலைக்கழகத்தின் தலைவரிடமிருந்து “தத்துவதிற்கான முனைவர் பட்டத்தைப்” பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவரான மன்ஜித் சிங் சஹல் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தொடரின் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்க நிலைக் கல்விப் பாடத் திட்டத்தில் கோண்டி மொழி இணைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
அம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்கள் ஆணையத்தின் (ASI - Airports Council International) 2018 ஆம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத் தரத் திட்டத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் “ஒரு ஆண்டில் 40 மில்லியன் பயணிகளைக் கையாண்ட விமான நிலையம்” என்ற பிரிவில் சிறந்த விமான நிலையமாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேரா என்ற பெயரைக் கொண்ட தெரு நாய் இமாலய சிகரத்தை அடைந்த முதலாவது நாயாக உருவெடுத்துள்ளது. இது திபெத்தைச் சேர்ந்த மஸ்திப் மற்றும் இமாலய மேய்ப்பு நாய் ஆகியவற்றின் கலப்பு போன்று காட்சியளிக்கிறது. இது எவரெஸ்ட் சிகரத்தின் தெற்கில் இமயமலையில் உள்ள 7000 மீட்டர் உயரம் கொண்ட பருன்சி என்ற சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளது.
இந்து தலீத் சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தானின் முதலாவது பெண் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக கிருஷ்ண குமார் கோலி உருவெடுத்துள்ளார்.
நிதி மோசடிக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நிதிக் கட்டமைப்புகள் ஆகியவற்றில் யுக்திசார் குறைபாடுகளைக் கொண்டுள்ளதால், “அதிக ஆபத்துடைய மூன்றாம் தர நாடுகள்” என்ற 23 நாடுகளைக் கொண்ட தனது பட்டியலில் பாகிஸ்தானை ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக இணைத்துள்ளது.
ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் குறியீட்டில் வாரேன் பப்பேட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பணக்கார நபராக மொய்ட் கென்னிசி லூயிஸ் வியூட்டன் சிஇ என்ற நிறுவனத்தின் தலைவரான பெர்னார்டு அர்னால்ட் உருவெடுத்துள்ளார்.