TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2019 1959 days 572 0
  • துணைப் பதிவாளர் அலுவலகங்களில் பழைய நில ஆவணங்களை ஆன்லைனில் (நேரடியாக இணையதளத்தில்) சரிபார்த்திடவும், நிலப் பட்டா வழங்கிடவும் வேண்டி ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ளது.
    • இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மேற்கு வங்கத்தை 12-வது I-லீக் போட்டியில் தோற்கடித்ததன் மூலம் சென்னை சிட்டி அணி சாம்பியன் அணியாக முடிசூட்டப்பட்டது.
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2019 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு பிரதமரின் செயலாளராக பாஸ்கர் குல்பே என்பவரின் மறுநியமனத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
  • பிரதமரின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற புத்தகம் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
  • இந்த வருடத்திய ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் சர்வதேச பெண்கள் தினத்தின் உருவப்படக் கண்காட்சியில் அங்கீகாரமளிக்கப்பட்ட பெண்களில் வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ்ஜும் ஒருவராவார்.
    • இந்தியாவில் தன்பாலின சேர்க்கையை குற்றவியல் முறையிலிருந்து விலக்குவதற்காக போராடிய வழக்கறிஞரான மேனகா குருசாமி உள்பட 21 விருதாளர்கள் இதில் அடங்குவர்.
  • மத்திய அரசு பணிக் கொடைக்கான வருமானவரி விலக்கை 20 லட்சம் வரைக்கும் இரட்டிப்பாக்கியிருக்கின்றது. இது தற்சமயம் ஓய்வு பெறுகிறவர்களுக்கும் கடந்த 12 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும்.
  • வாரணாசியில் காசி விஸ்வநாதர் பெருவழிப்பாதைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் அந்த புனிதத் தளத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் புதுப்பித்தலுக்கான ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்