TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 20 , 2019 1950 days 555 0
  • USA Today என்ற பத்திரிக்கையின் “பொழுதுபோக்குத் துறையில் மிக சக்தி வாய்ந்த பெண்களின்” பட்டியலில் ஓப்ரா வின்பிரே மற்றும் மெரில் ஸ்டிரீப் ஆகிய சர்வதேச நட்சத்திரங்களுடன் இந்தியாவைச் சேர்ந்த நடிகையான பிரியங்கா சோப்ரா ஜோனசும் இணைந்துள்ளார்.
    • USA Today என்பது சர்வதேச அளவில் விநியோகிக்கப்படும் அமெரிக்க தினசரியாகும். மேலும் இது அமெரிக்காவில் அதிக அளவில் விநியோகிக்கப்படுகிறது.
  • நாட்டில் சிட்டுக் குருவி மீட்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களை (SRRC - Sparrow Rescue and Research Centres) அமைப்பதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள ஹரியானா மாநில வன மற்றும் வன விலங்குத் துறையானது முதன்முறையாக உலக சிட்டுக் குருவி தினத்தை கொண்டாடுகிறது.
    • இந்த நிகழ்ச்சியானது பஞ்சகுலாவில் உள்ள பிர் சிகர்ஹாக் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறவிருக்கிறது.
  • ஜீன் - ஹென்றி சென்ட் என்பவர் ஹைட்டியின் பிரதமராக பதவியேற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்