கஜகஸ்தானின் அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் நுர்சுல்தான் நசப்பேவ்வை கௌரவிப்பதற்காக அந்நாடு தனது தலைநகரான ஆஸ்தானா என்ற பெயரை நுர்சுல்தான் என்று மாற்றியுள்ளது.
“டைகர் உமன்” என்பது “சர்துல்சுந்தோரி” என்ற வங்காள வரலாற்று நாவலின் ஆங்கில பதிப்பாகும். சர்க்கஸ் மற்றும் அன்பு குறித்து இது விவாதிக்கிறது. இந்த தினத்தின் கதாநாயகி முதலாவது பெண் சர்க்கஸ் கலைஞர் ஆவார்.
“சர்துல்சுந்தோரி” என்ற நாவல் சிர்சோ பந்தோபாத்யாய் என்பவரால் எழுதப்பட்டது. இது அருணவா சின்ஹா என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.
குறைந்த செலவில் விமானச் சேவையை அளிக்கும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் முதலாவது விமான நிறுவனமாக சர்வதேச வான்வழிப் போக்குவரத்து மன்றத்தில் (International Air Transport Association - IATA) இணைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் திட்ட பங்குரிமைகள் மீதான மூன்று நாள் மாநாடானது இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய வணிக அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி பீகார் தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினமானது பீகார் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது.
1912 ஆம் ஆண்டில் வங்காள மாகாணத்திலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பீகார் மாநிலம் பிரிக்கப்பட்டது.