அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து தொடங்க வேண்டும் என்று அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதர தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்கும் அதே நேரத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தினம் – இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் முஸ்லீம்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டி 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பாகிஸ்தான் அனுசரிக்கிறது. மேலும் இது பாகிஸ்தானின் குடியரசு தினமாகவும் கருதப் படுகின்றது. 1956 ஆம் ஆண்டின் இதே தினத்தில் அந்நாட்டின் முதல் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் பாகிஸ்தான் முதல் இஸ்லாமியக் குடியரசாக உருவெடுத்தது.