TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2019 1942 days 562 0
  • ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமானது கடற்கரையோரங்கள் மற்றும் கடல் ஆகியவற்றை மாசுபடுத்தக்கூடிய நெகிழிக் கழிவுப் பொருட்களுக்கு எதிரான சட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிக் கருவிகள், பருத்தி மொட்டுகள், வைக்கோல் மற்றும் கலக்கிகள் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு வாக்களித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் பேட்மிண்டன் ஆசியக் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டிகளின் 2-வது பதிப்பானது ஹாங் காங்கில் நடைபெற்றது.
  • இதில் ஜப்பானை வீழ்த்தி சீனா சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.
  • நார்வேயின் தலைநகரான ஓஸ்லோ ஆனது தனது மின் வாடகை மோட்டார் வாகனங்களுக்காக கம்பியில்லா, மின் தூண்டல் அடிப்படையிலான மின்னேற்ற நிலையங்களை அமைக்கும் உலகின் முதலாவது நகரமாக உருவெடுக்கவுள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டில் சுழிய உமிழ்வு வாகன அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்