TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 30 , 2019 1940 days 579 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ், டாக்டர் Y.V. ரெட்டி மற்றும் R. ரெட்டி ஆகியோர் இணைந்து எழுதிய “இந்திய நிதியியல் கூட்டாட்சி முறை” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகளானது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை உலகின் சிறந்த வான்பயண மையமாக ஏழாவது முறையாக அறிவித்துள்ளது.
    • இதில் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமானது 8 இடங்கள் முன்னேறி 59-வது இடத்தில் உள்ளது.
  • பெண்கள் மேம்பாடு 2019-ல் சிறப்பாகப் பணியாற்றியதற்காக புதுதில்லி அரசுப் பள்ளி ஆசிரியரான மனு குலாட்டி கௌரவிக்கப்பட்டார்.
  • இந்த விருதானது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தலுக்காக வழங்கப்படுகின்றது.
  • மத்திய அரசின் ஆற்றல் நிதியியல் கழகமானது ஊரக மின்வசதியாக்கக் கழக நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளைப் பெற்றதையடுத்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அரசிற்குச் சொந்தமான நிதியியல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • சந்தை மூலதன மதிப்பாக்கத்தை கொண்டு செயல்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த இடத்தில் இந்த நிதியியல் நிறுவனம் உள்ளது.
  • கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ - Adani Port and Special Economic Zone) ஆனது 2018-19ல் 200 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாண்ட முதலாவது இந்திய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
    • இந்த துறைமுகமானது கணக்கிடப்பட்ட காலமான 2020 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்