TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 31 , 2019 1939 days 587 0
  • விப்ரோ நிறுவனம் மற்றும் கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து ஐந்தாம் தலைமுறை வலையமைப்புகளின் வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பான தொழிற்துறை சவால்கள் மீதான பயன்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறன.
  • அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலம் வாழும் தலைமை நிர்வாகியாக நோபல் பரிசை வென்றவரும் அமெரிக்காவின் 39-வது அதிபருமான முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உருவெடுத்துள்ளார். தற்பொழுது இவருடைய வயது 94 ஆகும்.
  • இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியானது மத்திய ஆப்பிக்க நாட்டில் மூன்று சூரிய ஒளித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக காங்கோ நாட்டிற்கு $83.11 மில்லியன் மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் ஈரான் நாடு வெண்கலப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்த செர்பியாவைச் சேர்ந்த வெசிலின் மேட்டிக் என்பவர் இந்திய ஆண்கள் கைப்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முதன்முறையாக உயர் மதிப்புமிக்க கைபேசி நிறுவனமான ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்