தமிழ்நாடு மாநில அரசானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமானது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் இரயில் நிலையமாக அழைக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு தானிய சந்தையிடல் கூடம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய இரண்டும் கரும்புச் சாற்றிலிருந்து இரசாயனமற்ற வெல்லம் மற்றும் குழந்தைகளுக்கான திணை அப்பம் போன்ற ஆரோக்கியப் பலன்களைக் கொண்ட சுவையான பழுப்பு அரிசிப் பாலை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
BSE (மும்பை பங்குச் சந்தை) மற்றும் இந்திய சர்வதேசச் சந்தை (India INX) ஆகிய இரண்டும் இந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர் சமூகம் மற்றும் நிறுவனங்களை இணைப்பதற்காக மாஸ்கோ சந்தையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
BSE மற்றும் India INX ஆகிய இரண்டும் மாஸ்கோ சந்தையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபடும் முதலாவது இந்தியப் பங்குச் சந்தைகளாகும்.
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (SEBI - Securities and Exchange Board of India) கைபேசி பணவழங்கீடுகள் நிறுவனத்தின் முதலீடு மற்றும் சொத்து மேலாண்மைத் தளமான பேடிஎம் நிதி நிறுவனத்திற்கு தரகுச் சேவைகளை தொடங்குவதற்காக தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல் என்பவர் FIFA ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் இடம்பெற்ற முதலாவது இந்தியராக இவர் உருவெடுத்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை அமைப்பான நாஸ்காம் ஆனது 2019-20 ஆம் ஆண்டிற்கான தனது தலைவராக டபிள்யூஎன்எஸ் உலக சேவைகள் குழுவில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கேசவ் முருகேஷை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டிற்காக இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் தலைவராக டயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸின் தலைமை மேலாண் இயக்குனராக உள்ள விக்ரம் கிர்லோஸ்கர் பொறுப்பேற்றார்.