வால்மார்ட்டிற்குச் சொந்தமான இணையவழி வணிக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனமானது தன்னுடைய தளத்திலிருந்துப் பொருட்களை வாங்கும் பயனாளிகளுக்கு உடனடியாகக் கடன் வழங்குவதற்காக காணொளி அடிப்படையிலான ‘உன்னுடைய வாடிக்கையாளர்களை அறிந்து கொள்’ என்ற முறைக்கான தீர்வைகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியக் கடற்படையும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமும் (Council of Scientific and Industrial Research - CSIR) இந்தியக் கடற்படைக்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
கொடைக்கானல் மலைப் பூண்டானது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. இவற்றின் தனித்துவ மருத்துவப் பண்புகள், நறுமணச் சுவை ஆகியவற்றின் காரணமாக புவிசார் குறியீடு என்ற அங்கீகாரம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.