TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2019 2060 days 630 0
  • மார்ச் மாதத்தில் இந்தியாவின் பங்குச் சந்தைக்கு வந்துள்ள வெளிநாட்டு மூலதன வரத்தானது 89 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தியப் பங்குச் சந்தைக்கு வந்த மிகப் பெரிய வெளிநாட்டு மூலதனம் இதுவாகும்.
    • வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII - Foreign Institutional Investors) மற்றும் வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்கள் (FPI - Foreign Portfolio Inevestors) ஆகியவற்றின் முதலீடுகள் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI - Securities and Exchange Board of India) மூலம் ஒழுங்குபடுத்தப் படுகின்றன. இந்த முதலீடுகளின் மீதான உச்ச வரம்பு இந்திய ரிசர்வ் வங்கியினால் பராமரிக்கப்படுகின்றது.
  • புல்வாமாவில் இந்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசானது 270 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் ஊரி தேசிய நெடுஞ்சாலை 1-ல் மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.
    • இந்தத் தடையானது காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு செயல்படுத்தப்பட விருக்கின்றது. இத்தடையானது 2019 ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • யூடியூபின் தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி என்பவர் தனது வருடாந்திரத் தலைமை நிகழ்வான “பிராண்ட்கேஸ்ட்” என்பதில் யூடியூபின் மிகப்பெரிய மற்றும் விரைவான வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
    • காம்ஸ்கோர் தரவின்படி, இந்தியாவில் யூடியூபானது 265 மில்லியனுக்கும் மேற்பட்ட மாதாந்திர நிகழ்நேர பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்