தமிழ்நாடு மாநிலக் காவல் துறை பங்கு கொள்ளும் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தமிழ்நாட்டுக் காவல் துறையின் பொது இயக்குனராக இந்தியக் காவற்பணி அதிகாரியான அஸ்தோஷ் சுக்லாவை இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission) நியமித்துள்ளது. இவர் உடனடியாக இப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
மாநில காவல்துறை அதிகாரிகள் சிறைத் துறை தலைவரான சுக்லா தலைமையில் செயல்படவிருக்கின்றனர்.
முதன்முறையாக தேர்தல் ஆணையமானது சீர்திருத்தப்பட்ட மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட 192 நபர்களுக்காக சென்னையில் உள்ள மனநல நிறுவனத்தில் ஒரு வாக்குப் பதிவு மையத்தை அமைக்கவிருக்கிறது.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியானது “மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் இல்லத்தின்” பொறுப்பாளராக அறுவை சிகிச்சை மருத்துவரான வேலன்டைன் கொனோலியை நியமித்தது. 1875 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.