TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 16 , 2019 2054 days 623 0
  • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில்வே நிலையமானது உலகின் மிக நீளமான இரயில் நிலையத்தின் பெயர் என்ற சிறப்புத்துவத்தை ஒரு எழுத்தின் முலம் இழந்துள்ளது.
    • ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேல்ஸில் உள்ள இரயில் நிலையமானது “LlanFairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch” என்ற பெயரால் வழங்கப்படுகிறது. உலகச் சாதனைப் பெற்ற இந்த இரயில் நிலையத்தின் பெயரானது 58 எழுத்துகளைக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அபுதாபி சர்வதேச புத்தகத் திருவிழாவின் போது (ADIBF - Abu Dhabi International Book Fair) “நன்மதிப்பு விருந்தாளி” நாடாக இந்தியா கலந்து கொள்ளும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ADIBF ஆனது 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • போர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வாடிக்கையாளர்களால் முன்னணி வங்கியாக எச்டிஎப்சி வங்கி கண்டறியப்பட்டுள்ளது. போர்ப்ஸ் நாளிதழானது 23 நாடுகளில் ஆய்வை நடத்தியது. இந்தத் தரவரிசையில் ஐசிஐசிஐ வங்கியானது இரண்டாம் இடத்திலும் எஸ்பிஐ வங்கியானது 11-வது இடத்திலும் உள்ளது.
  • ஆண்டின் தலைசிறந்த பொதுத் துறை நிறுவனத்திற்கான புகழ்பெற்ற “2019 ஆம் ஆண்டின் AIMA (The All India Management Association - AIMA) மேலாண் இந்திய விருதை” இந்திய எண்ணெய்க் கழகம் பெற்றுள்ளது. அனைத்து இந்திய மேலாண்மைக் கழகமானது நாட்டில் மேலாண்மை தொழிற் பண்பட்டவர்களுக்கான தலைமை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்