TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 22 , 2019 1917 days 593 0
  • ஹரியானாவில் உள்ள சோனிபட் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் இயங்குவதன் மூலம் யமுனாவின் வெள்ளப் பெருக்குப் பகுதியில் அரிப்பு ஏற்படுகிறது எனக் கூறப்படுவதை ஆராயத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது ஒரு குழுவை அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவானது NGT-ன் தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது .
  • மத்தியப் பிரதேசத்தின் துர்ஜான்பூர் எனும் கிராமத்தை ஷிவ்தாம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
  • ஜாலியன்வாலா பாக் படுகொலையைப் பற்றி நானக் சிங்கால் எழுதப்பட்ட 100 வருடத்திற்கு முந்தைய புத்தகமான “கூனி வைசாகி” எனும் நூலின் ஆங்கில மொழிப் பெயர்ப்பானது அபுதாபியில் வெளியிடப்பட்டது.
    • இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதரான நவ்தீப் சிங் சூரி இப்புத்தக வெளியீட்டை நடத்தினார்.
  • டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் 2030 ஆம் ஆண்டின் குறிக்கோள்கள் மற்றும் பாரீசு ஒப்பந்தம் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்திசைவு மீதான உலகளாவிய முதலாவது மாநாட்டில் தூய்மையான மற்றும் திறன் வாய்ந்த குளிர்வித்தல் மீதான உலகளாவிய முதலாவது கூட்டணி தொடங்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் G20 குழுமத் தலைவர்களின் 15-வது வருடாந்திர மாநாட்டை சவுதி அரேபியா நடத்தவுள்ளது.
  • காஸ்மிக் கதிர்களைக் கண்டறிய விண்வெளிக்கு அனுப்பப்படும் சிறிய ஆய்வு செயற்கைக் கோளான க்யூப்சாட் குழுவிற்கு இந்திய அமெரிக்க மாணவரான கேசவ் ராகவனின் தலைமையிலான குழுவினை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.
  • இங்கிலாந்து கார் பந்தய ஓட்டுநரான லூயிஸ் ஹாமில்டன் சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பார்முலா ஒன்-இன் 1000-வது போட்டியில் தனது 75-வது வாழ்நாள் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்