பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள் மீதான அறிவியல்சார் ஆராய்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவிப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகமானது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்துடன் (CSIR - Council of Scientific and Industrial Research) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஆசியாவின் முதலாவது பலூன் செயற்கைக் கோளானது தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவிகளின் குழுவினால் ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக் கோளானது எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 (விண்வெளி ஏவு வாகனத்தைப் போன்றது) மணியம்மையார் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நார்த்ரோப் குருமானால் வடிவமைக்கப்பட்ட அன்டாரிஸ் ஏவு வாகனமானது விர்ஜினியாவில் உள்ள நாசாவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு “சிக்னஸ் சரக்கு விண்கலத்தைச்” சுமந்து சென்றது.
இந்த சிக்னஸில் உள்ள 20 எலிகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப் படவிருக்கின்றது. இதன் நோக்கம் இழுப்பு வாத நோய்த் தடுப்பு மருந்தின் திறன் குறித்து சோதனை செய்வதாகும்.
மதராஸ் உயர் நீதிமன்றமானது இந்துத் திருமணச் சட்டத்தின்படி, “மணமகள்” என்ற சொல்லானது மாற்றுப் பாலினத்தவரையும் குறிக்கும் என்றும் ஒரு பெண்ணாகப் பிறந்தவர்களை மட்டுமே அந்தச் சொல் குறிக்காது என்றும் கூறியுள்ளது.