அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சனைக்குரிய பகுதியான கோலன் குன்றுகளை இஸ்ரேலின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, அங்கு உள்ள யூதக் குடியிருப்பிற்குப் பெயரிடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடானது அமெரிக்க அதிபரை கௌரவிக்கும் விதமாக, ஜெருசலமின் மேற்குச் சுவர் அருகே திட்டமிடப்பட்டுள்ள இரயில் நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் (Securities and Exchange Board of India) அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு கட்டமைப்பைப் போன்று மும்பை பங்குச் சந்தையும் (Bombay Stock Exchange - BSE) தனது உறுப்பினர்களுக்கு இணையப் பாதுகாப்புச் சேவைகளை அளிப்பதற்காக வலையமைப்பு நுண்ணறிவு என்ற ஒரு தனியார் நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளது.
வலையமைப்பு நுண்ணறிவு நிறுவனமானது உறுப்பினர்களுக்கு அனைத்து நாட்களிலும் (24x7) இணையப் பாதுகாப்பு சேவைகளை அளிப்பதற்காக தனது சொந்த தளமான “ப்ளுஸ்கோப்” என்ற தளத்தைப் பயன்படுத்த விருக்கின்றது.
பாரத ஸ்டேட் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனமானது இணையத் தாக்குதல்கள் காரணமாக நிதியியல் மற்றும் தொடர் இழப்புகளிலிருந்து வணிகங்களைப் பாதுகாப்பதற்காக “இணையப் பாதுகாப்புக் காப்பீடு” என்ற ஒரு சேவையைத் தொடங்கியுள்ளது.
ரோலக்ஸ்-மாண்டீ-கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் ATP மாஸ்டர்ஸ் 1000 என்ற பட்டத்தை வென்ற முதலாவது இத்தாலியராக பேபியோ பாக்னினி உருவெடுத்துள்ளார். இவர் செர்பீயாவைச் சேர்ந்த தூசன் லஜோவிக் என்பவரைத் தோற்கடித்தார்.
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனமானது வருடாந்திர வருவாயில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய முதலாவது இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
2018–2019 ஆம் நிதியாண்டிற்கான இதன் வருவாயின் மதிப்பு ரூ. 1,30,556 கோடியாகும். இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு மதிப்பான ரூ. 69,198 கோடியை விட இது 89 சதவிகிதம் அதிகமாகும்.
வட கொரிய அதிபரான கிம் ஜாங்-உன் மற்றும் இரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் ஆகியோர் பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோஸ்தாக்கில் நடைபெற்ற மாநாட்டில் முதன்முறையாக சந்தித்துப் பேசினர்.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது தேசிய வீட்டுவசதி வங்கி (National Housing Bank - NHB), தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture & Rural Development - Nabard) ஆகியவற்றில் உள்ள தனது மொத்தப் பங்குகளையும் மத்திய அரசிற்கு விற்பனை செய்துள்ளது. ரிசர்வ் வங்கியானது இந்த இரண்டு நிறுவனங்களிடமும் வைத்துள்ள பங்குகள் முறையே ரூ. 1,450 கோடி மற்றும் ரூ. 20 கோடிகள் ஆகும்.