TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 28 , 2019 2042 days 640 0
  • முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகமானது இந்தியாவைச் சேர்ந்த இந்துத் தந்தை மற்றும் முஸ்லீம் தாய்க்குப் பிறந்த 9 மாதங்கள் நிரம்பிய ஒரு பெண் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளது.
    • ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு சகிப்புத் தன்மை உடைய நாட்டிற்கான உதாரணமாகத் தான் திகழ்வதை எடுத்துக் காட்டுவதற்காக 2019 ஆம் ஆண்டை “சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக” அறிவித்துள்ளது.
  • கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் உதடுகள், தாடை மற்றும் நாக்கு ஆகியவற்றுடன் கூடிய மெய்நிகர் குரல் வளையப் பாதையை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மூளையின் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இயற்கையான குரலைப் போன்று செயற்கையான குரலை ஏற்படுத்த முடியும்.
    • இது விபத்துகள், பக்க வாதம் அல்லது நரம்பு சார்ந்த குறைபாடுகள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருப்பவர்களுக்கு உதவ இருக்கின்றது.
  • இரண்டு போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக கிரிக்கெட் லீக் பிரிவின் ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்கு பெறும் முதலாவது பெண் நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளைரி போலோசாக் உருவெடுத்துள்ளார்.
  • தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக பெய்ஜிங்கில் நடைபெற்ற மண்டலம் மற்றும் பாதை வழித்தட மன்ற (Belt and Road Forum) மாநாட்டை இரண்டாவது முறையாக இந்தியா தவிர்த்துள்ளது.
    • மண்டலம் மற்றும் பாதை வழித்தடத் திட்டத்தின் முக்கியக் கூறான சீன-பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதைக்கு (China-Pakistan Economic Corridor - CPEC) எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது.
  • இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை கட்டமைப்பில் “போதிய அளவிடத் தகுந்த முன்னேற்றங்கள்” ஏற்படாத காரணத்தினால் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் (USTR - The US Trade Representatives) இந்தியாவை “முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியல்” இல் வைத்துள்ளனர்.
    • தனது சொந்தச் சட்டமான “பிரிவு 301 அறிக்கை” அல்லது உலக வர்த்தக அமைப்பின் வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகின்றது.
  • கேரளாவின் விழிஞ்சியம் துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் “எல் அண்ட் டி” என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட “ICGS C-441” என்ற இடைமறிப்புக் கப்பலானது இந்தியக் கடற்படைப் பாதுகாப்புப் பணியில் இணைந்தது. இது உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்டக் கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்