அங்கோலாவைத் தாயகமாகக் கொண்ட இசாத் மாங்கனி இனமானது உத்தர கன்னடாவில் மிகவும் அரிதான பழ வகையாக மாறி அச்சுறு நிலையில் உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டிய எல்லைப் பகுதியில் வெடி பொருட்களை சேமித்து வைப்பதற்காக நிலத்துக்கு அடியில் குகைகளை அமைக்க இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனமான தேசிய நீர்மின் திறன் கழகமானது (NHPC - National Hydroelectric Power Corporation) இத்திட்டத்தின் பங்காளர் நிறுவனமாகும்.
இந்தியத் தொழிற் துறை வளர்ச்சி வங்கியானது (IDBI - Industrial Development Bank of India) ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வணிகப் பரிமாற்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் ஈரான் வர்த்தகப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளது.
மும்பை, கொல்கத்தா, தில்லி, இந்தூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகரங்களாகும்.
அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (Council of Scientific & Industrial Research) மற்றும் செல் & மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “எசிட்னா” எனப்படுகின்ற ஒரு முட்டையிடும் பாலூட்டியின் பாலில் காணப்படும் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்புப் புரதத்தைப் பிரித்தெடுத்துள்ளனர்.
இந்தப் புரதங்களானது கால்நடைகளில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு மாற்றாகப் பணியாற்றும்.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் இந்தியப் பிரிவு மற்றும் நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டமானது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளிடையே பங்கேற்பு, திறன் மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு ஒரு திறந்தவெளித் தளத்தை உருவாக்குவதற்கான உறுதிக் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இத்திட்டமானது அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அடல் இடைமுக ஆய்வகத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
அமெரிக்காவில் பயண இசைவுக் காலம் முடிந்த பிறகும் தங்கி இருப்பவர்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் மக்களை பாகிஸ்தான் ஏற்க மறுப்பதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவானது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இரண்டாவது பிரிவு போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் ஆணையத்தில் ஒரு இடத்தையும் ஒரு நாள் சர்வதேசத் தர நிலையையும் பெற்றுள்ளது.