TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2019 1901 days 725 0
  • ஒருங்கிணைந்த வாழ்வாதார மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீட்டு ஆணையமானது (Green Rating for Integrated Habitat Assessment - GRIHA) இந்தியா முழுவதும் தற்பொழுதுள்ள பள்ளிகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக “தற்பொழுதுள்ள பள்ளிகளுக்கான GRIHA” என்ற ஒரு தர நிர்ணயக் குறியீட்டைத் தொடங்கியுள்ளது.
    • இது சுற்றுச்சூழல் மீதான தங்கள் பள்ளிகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் - உன் தலைமையின் கீழ் அந்நாடு பல்வேறு குறைந்த வரம்புள்ள ஏவுகணைகளை ஜப்பான் கடற்பகுதிக்குள் ஏவியுள்ளது.
  • மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அழுத்தத்தைப் போக்கும் செர்ரோடோனின் (வேதியியல் பெயர் : 5 – ஹைட்ராக்ஸிட்ரைட்டமைன்) ஒரு புதிய செயல்பாட்டைக் கண்டறிந்துள்ளனர்.
    • இது நரம்பியல்சார் நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு உதவும்.
  • முதன்முறையாக, ரவீந்திரநாத் தாகூரின் அரிதான எண்ணெய் ஓவியங்களில் ஒன்றான “மேக்பெத்திலிருந்து மூன்று மந்திரவாதிகள்” என்ற ஒரு ஓவியம் கல்கத்தாவில் உள்ள இரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் உள்ள அபநிந்திரநாத் தாகூர் அரங்கத்தில் காட்சிப்படுத்தப் படவிருக்கின்றது.
    • இந்தப் பார்வையிடக்கூடிய ஓவியச் சேமிப்பு அரங்கமானது இரவீந்திரநாத் தாகூரின் 158-வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது திறக்கப்பட இருக்கின்றது.
  • ஏப்ரல் 17 அன்று, ஏறத்தாழ 192.8 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்களுடன் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் இந்தோனேசியா தனது அதிபர் மற்றும் சட்ட சபைத் தேர்தல்களை நடத்தியது.
    • இந்தோனேசியாவின் தேசியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, தேர்தலை நடத்தியதற்கு உதவியதால் ஏற்பட்ட பணிச் சுமையின் காரணமாக 311 தேர்தல் அதிகாரிகள் இறந்துள்ளனர் என்றும் 2232 மக்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் பனாமாவில் நடைபெற்ற தேர்தலில், அந்நாட்டு மக்கள் ஜனநாயகப் புரட்சிகர மாற்றம் என்ற கட்சியின்  வேட்பாளரான “லாரன்டினோ கோர்டிசோ” என்பவரை தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • ரோஹிங்யா பிரச்சனை குறித்து செய்தி வெளியிட்டதற்காக 500 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையைச் சேர்ந்த 2 மியான்மர் பத்திரிக்கையாளர்களான வா லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்