முதன்முறையாக, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் - செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் (Centre for Cellular and Molecular Biology - CCMB) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் லட்சத் தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களின் மரபணு குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இது லட்சத் தீவில் இருக்கும் பெரும்பான்மையான மனித வம்ச இனங்கள் தெற்காசியாவிலிருந்தும் கிழக்கு மற்றும் மேற்கு யூரேசியாவிலிருந்தும் சிறிய தாக்கங்களுடன் பெறப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் மீது “ஒருதலைப் பட்சமாக” விசாரிக்க வேண்டாம் என்று எஸ்.ஏ போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட உள் விவகாரக் குழுவிற்கு நீதியரசர் DY சந்திரசூட் கடிதம் எழுதியுள்ளார்.
“ஒருதலைப் பட்சம்” (ex parte) என்பது எதிர்த் தரப்பினரின் பிரதிநிதித்துவம் அல்லது அவருக்கு அறிவிக்காமல் மற்றொரு தரப்பினரை வைத்து நடத்தப்படும் ஒரு சட்டப் பூர்வ நடவடிக்கையாகும்.
2019 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதி அன்று பசவ ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது. பசவ ஜெயந்தி என்பது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்து சமயத்தைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான பசவண்ணாவின் பிறந்த தினமாகும்.
பின்லாந்தின் ரோவாநெய்மியில் நடைபெற்ற ஆர்க்டிக் ஆணையத்தின் அமைச்சர்களுக்கிடையேயான 11வது சந்திப்பின் போது அரசாங்கங்களுக்கிடையேயான மன்றமான ஆர்க்டிக் ஆணையத்திற்கு இந்தியா “பார்வையாளராக” மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் மற்றும் அணுக்கரு ஒப்பந்தம் ஆகியவற்றை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் தனது சில உறுதிமொழிகளை குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட “ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைத் திட்டம்” (JCPOA - Joint Comprehensive Plan of Action) என்று அறியப்படும் பலதரப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது முன்னுரிமைத் துறைக்கு கடனளித்தல் திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு மண்டல ஊரக வங்கிகள் (RRB - Regional Rural Banks) மற்றும் சிறு நிதியியல் வங்கிகள் மூலம் வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் வரம்புகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
இது இதர பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுடன் ஒரு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்திய வர்த்தக தொழில்துறைக் கூட்டமைப்பினால் (The Federation of Indian Chambers of Commerce and Industry - FICCI) வெளியிடப்பட்ட “இந்தியாவின் உள்நாட்டு சுற்றுலா: வாய்ப்புகளைத் திறத்தல்” என்ற தலைப்பு கொண்ட ஒரு அறிக்கையானது இந்தியாவின் MICE/மைஸ் (Meetings, Incentives, Conferneces, Exhibition/சந்திப்புகள், சலுகைகள், கருத்தரங்கங்கள், கண்காட்சி) சுற்றுலா ஒவ்வொரு ஆண்டும் 8 சதவிகிதம் வளர்ந்துக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.
FICCI என்பது 1927 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் ஆலோசனையின் பேரில் G.D. பிர்லா மற்றும் புருஷோத்தம் தாஸ் தாகூர் தாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் வணிக நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பாகும்.