TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 10 , 2019 2031 days 711 0
  • ஜப்பானின் மிகப்பெரிய முட்டை உற்பத்தியாளரான ஐஎஸ்இ புட்ஸ் (ISE Foods) என்ற நிறுவனத்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • இந்தியா முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் கழிவு மேலாண்மை, நோயினைக் கண்டறிதல் மற்றும் முட்டைகளின் தரத்தினை உயர்த்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
  • இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்காக “AJIT” (அஜித்) என்ற ஒரு நுண்செயலியை மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
    • மேலும் இது குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். https://www.tnpscthervupettagam.com/indias-first-indigenous-microprocessor/ (தேதி : 10.11.2018).
  • இந்திய வருவாய்ப் பணி அதிகாரி மற்றும் முன்னாள் போதைப் பொருள்கள் துறை ஆணையரான ஜகஜித் பவாடியா ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் சர்வதேசப் போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (INCB - International Narcotics Control Board) 5 ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • INCB ஆனது ஐக்கிய நாடுகளின் மருந்து ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தனிச் சுதந்திர மற்றும் பகுதி நீதித்துறை சார் அமைப்பாகும்.
  • “மொத்தச் சுற்றுச்சூழலுக்கான அறிவியல்” என்ற பத்திரிக்கையில் ஆஸ்திரேலிய மற்றும் வங்க தேச ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது கால நிலை மாற்றம் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகிய இரண்டும் சுந்தரவனப் பகுதிகளை அழித்து விடும் என்று எச்சரித்துள்ளது.
    • சுந்தரவன சதுப்பு நிலக் காடுகள் உலகின் மிகப்பெரிய ஈரநிலக் காடுகளாகும். இந்த வளமான சுற்றுச்சூழலானது அச்சுறுத்தல் நிலையில் உள்ள விலங்கான வங்கப் புலி உள்ளிட்ட பலநூறு விலங்கினங்களுக்கு அடைக்கலம் அளிக்கின்றது.
  • நீண்ட கால இலக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்திய கைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான தேசிய அணிப் பிரிவின் தலைமைப் பயிற்சியாளராக செர்பியாவைச் சேர்ந்த டிராகன் மிகைலோவிக் என்பவரை இந்தியக் கைப்பந்துக் கூட்டமைப்பு நியமித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு மே 03 ஆம் தேதி முதல் மே 05 ஆம் தேதி வரை இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா (India, Brazil and South Africa - IBSA) ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஷெர்பாக்களின் (பிரதிநிதிகள்) சந்திப்பானது கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது.
    • IBSA இன் ஷெர்பாக்களின் சந்திப்பிற்கு முன்பு, இதே இடத்தில் 9-வது IBSAவின் அமைச்சர்களுக்கிடையேயான முத்தரப்பு சந்திப்பு நடத்தப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் தொழிலாளர் தினத்தின் (மே 01) கருத்துருவானது, “சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழிலாளர்களை ஒன்றிணைத்தல்” என்பதாகும்.
  • ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் வளமான கடல் மற்றும் நீடித்த கடல்சார் (நீலப்) பொருளாதாரத்திற்காக 5 பில்லியன் டாலர் மதிப்பிலான செயல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கி (ADB - Asian Development Bank) தொடங்கியுள்ளது.
  • அமெரிக்க விமானப் படை ஆய்வகமானது நியூ மெக்சிகோவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் வெள்ளை நிலப்பரப்பு ஏவுகணை சோதனைப் பகுதியில் “சுய பாதுகாப்பு கொண்ட அதிக ஆற்றலுடைய லேசர் செயல்முறை விளக்கம்” (Self-Protect High Energy Laser Demonstrator - SHiELD) என்ற ஒரு லேசர் அமைப்பை பரிசோதனை செய்தது.
    • இது பறந்து கொண்டிருக்கும் போது பல்வேறு ஏவுகணைகளை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது.
  • ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமானது ஏறத்தாழ ரூ.620 கோடி மதிப்பிலான 259 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரிட்டனைச் சேர்ந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனமான ஹேம்லேய்ஸை கையகப்படுத்த விருக்கின்றது.
    • ஹேம்லேய்ஸ் நிறுவனம் 1760 ஆம் ஆண்டில் “நோகா ஆர்க்” என்ற ஒற்றைக் கடையைக் கொண்ட நிறுவனமாக தொடங்கப்பட்டது.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டரான சாகித் அப்ரிடி “விளையாட்டை மாற்றுபவர்” என்ற தனது சுயசரிதையை எழுதியுள்ளார். இந்தப் புத்தகமானது அப்ரிடி மற்றும் பத்திரிக்கையாளரான வஜாகத் S கான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்