TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2019 1898 days 806 0
  • முதன்முறையாக பிட்ஸ்பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நோய்த் தொற்றுடன் இருக்கும் ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்காக மரபணு மாற்றப்பட்ட வைரஸ்களைப் பயன்படுத்தினர்.
    • இது 2019-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி இயற்கை மருத்துவம் என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது.
  • ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்களின் தலைமையிலான ஒரு பன்னாட்டுக் குழுவானது கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைப் பாறையாக மாற்றக் கூடிய ஒரு முறையைக் கண்டறிந்துள்ளது. இந்தப் பாறையானது புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக விளங்கும் தீய உமிழ்வுகள் கலந்துள்ள காற்றைச் சுத்தமாக்கும்.
    • இவர்களின் இந்த முறையானது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எரிமலைப் பாறையினால் கார்பன் உறிஞ்சப்படுகின்ற  இயற்கை முறையைப் பிரதிபலிக்கின்றது.
  • ஆஸ்திரேலியாவின் காந்தாஸ் என்ற விமான நிறுவனம்  QF739 என்ற பெயருடைய உலகின் முதலாவது சுழியக் கழிவு கொண்ட ஒரு வணிக விமானத்தை சிட்னியிலிருந்து அடிலெய்டு வரை இயக்கியது. இது தனது அனைத்துக் கழிவுகளையும் மட்கச் செய்தல், மீண்டும் அவற்றைப் பயன்படுத்துதல், மறுசுழற்சி ஆகிய முறைகளின் மூலம் அப்புறப்படுத்தியது.
  • லட்சத் தீவுகள் ஒன்றியப் பிரதேசம், தனது தென்னை மரங்களின் விளைச்சலை அழித்துக் கொண்டிருக்கும் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக கொறிக்கும் விலங்குகள் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கேரளாவிலிருந்து மூன்று ஜோடி கூகை ஆந்தைகளை வாங்கியுள்ளது.
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமானது (Central Board of Indirect Taxes and Customs - CBIC) உலக சுங்க அமைப்பின் (WCO - World Customs Organization) ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 33 உறுப்பினர்களுக்காக ஒரு சந்திப்பை  கொச்சியில் ஏற்பாடு செய்தது. WCO-ஆனது எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்துவதை வலியுறுத்துகின்றது.
    • WCO ஆனது உலகின் 98 சதவிகித வர்த்தகத்தை நிர்வகிக்கின்றது. இது 183 உறுப்பினர்களுடன் புரூசல்ஸைக் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது.
  • AFRASIA வங்கியின் 2019-ஆம் ஆண்டின் உலக செல்வ இடப்பெயர்வு மறு ஆய்வின்படி 2018-ஆம் ஆண்டில் அதிகச் செல்வம் மிக்க 5000 தனிநபர்கள் (HNI - High Net Worth Individuals) அல்லது இந்தியாவின் மிகவும் செல்வம் மிக்கவர்களில் 2 சதவிகிதத்தினர் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
    • 2008 ஆம் ஆண்டிலிருந்து உலகின் செல்வம் மிக்க இடம்பெயர்வாளர்கள் இடம்பெயரும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது (12,000). இதற்கு அடுத்து அமெரிக்கா (10,000) மற்றும் கனடா (4,000) ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்றக் கொலீஜியமானது நீதியரசர் அனிருத்தா போஸ் மற்றும் நீதியரசர் A.S. போபண்ணா ஆகியோர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்திய அரசு இவர்கள் இருவரின் நியமனத்திற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.
    • அரசின் இந்த முடிவானது இந்தியத் தலைமை நீதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர் உச்ச நீதிமன்றத்தின் மொத்தமுள்ள 31 நீதிபதிகளையும் நிரப்பும் பொருட்டு இவர்களது பெயரை மீண்டும் அரசிற்கு அனுப்பியுள்ளார்.
  • இந்தியப் பணி நியமனக் கூட்டமைப்பின்படி (ISF - Indian Staffing Federation) இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 3 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ISF என்பது “நெகிழும் தன்மை” கொண்ட வேலைவாய்ப்புகளுக்கான ஒரு அமைப்பாகும்.
    • செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்களைப் பற்றிக் கற்றல், பொருட்களின் இணையம், தரவு அறிவியல், பகுப்பாய்வு, பெருந் தரவு, தொடர் சங்கிலி மற்றும் புனை மெய்யாக்கம்  ஆகிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பானது குரோஷியாவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச வீரரான இகோர் ஸ்டிமாக்கை இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
    • 51 வயதான ஸ்டிமாக் என்பவர் 1998-ஆம் ஆண்டில் FIFA உலகக் கோப்பையில் மூன்றாவது இடம் பிடித்த குரோஷியாவின் “தங்கத் தலைமுறையின்” ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்