TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2019 1897 days 662 0
  • சத்தீஸ்கர் மாநில காவல் துறையானது தனது நக்சல் எதிர்ப்புப் படைப் பிரிவான மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படைப் பிரிவில் பெண் கமாண்டோக்களை முதன்முறையாக இணைத்துள்ளது.
    • இது துணை காவல்துறைக் கண்காணிப்பாளரான தினேஸ்வரி நந்த் என்பவரின் தலைமையில் 30 பெண் கமாண்டோக்களைக் கொண்டுள்ளது. இவர்கள் வனங்களில் போர் செய்வதற்கான விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளனர்.
  • குரங்கு அம்மை வைரஸின் முதலாவது பாதிப்பானது சிங்கப்பூரில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. சிங்கப்பூர் வந்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவரால் இந்த வைரஸ் பரவியது.
    • இது வன விலங்குகள் அல்லது குரங்குகள், வௌவால்கள், கொறிக்கும் விலங்குகள் ஆகிய விலங்குகளின் மாமிசத்தினால் பரவுகின்றது. வனவிலங்குகளின் மாமிசமானது சில ஆப்பிரிக்க நாடுகளில் புரதத்தின் முக்கிய மூலமாக செயல்படுகின்றது.
  • கத்தோலிக்க தேவாலயத்தில் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாக ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தேவாலய அதிகாரிகளிடம் புகார் அளிக்கக் கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை போப் பிரான்சிஸ் வெளியிட்டார்.
    • போப்பின் இந்த முன்முயற்சியானது “மோடூ ப்ரோபிரியோ” என்று அழைக்கப்படுகிறது. இது கத்தோலிக்க மொழியில் போப்பின் முன்முயற்சியினை எடுத்துக் காட்டும் விதமாக, அவரால் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட ஆவணம் என்பதைக் குறிக்கும்.
  • அயோத்தியா நிலம் குறித்த வழக்கின் விசாரணையானது இந்திய உச்ச நீதிமன்றத்தினால் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்: https://www.tnpscthervupettagam.com/ayodhya-dispute/.
  • 2019 ஆம் ஆண்டு மே 09 அன்று, பிரிட்டனுக்கு அடுத்து பருவ நிலை குறித்த நெருக்கடி நிலையை அறிவிக்கும் இரண்டாவது நாடாக அயர்லாந்து உருவெடுத்துள்ளது. இதற்கு முன் பிரிட்டன் பருவநிலை குறித்த நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
    • இந்த நெருக்கடி நிலையானது 2030 ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளை அதிக அளவில் குறைக்கவும் சட்டத்தினால் ஏற்படும் மாற்றங்களை விரைவாக கண்காணிக்கவும் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகின்றது.
  • அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது சூரிய ஒளிக் கதிர்களை உறிஞ்சக் கூடிய உடலில் இடப்படும் களிம்புகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து அதிக அளவிலான தீங்குகளை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளது.
    • அவோபென்சோன், ஆக்டோகிரைலீன், ஆக்சிபென்சோன் மற்றும் எகாம்சுலே ஆகியவை இந்த இரசாயனங்களாகும்.
  • காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலையடுத்து இந்தியாவில் ஒரு பகுதியில் தங்கள் அமைப்பை நிறுவியுள்ளதாக அந்த தீவிரவாதக் குழு முதன்முறையாக அறிவித்துள்ளது.
    • இந்தப் பகுதியினை “விலாயாக் ஆப் ஹிந்த்” என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர். இது ஒரு சந்தேகத்திற்கிடமான கூற்று என்றாலும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • அமேசான் மற்றும் விண்வெளி நிறுவனமான “ப்ளு ஆரிஜின்” ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைவரான “ஜெப் பெசோஸ்” என்பவர் “ப்ளூ மூன்” (நீல நிலவு) என்று பெயரிடப்பட்ட நிலவில் தரையிறங்கும் ஒரு சாதனத்தை வெளியிட்டுள்ளார்.
    • இது 2024 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களையும் கருவிகளையும் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட விருக்கின்றது.
  • நிதியியல் சேவைகளை அளிக்கும் “ஸ்டான்டர்டு சார்ட்டர்டு” என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியா, வங்க தேசம், வியட்நாம், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 2020 ஆம் ஆண்டில் நிலையான பொருளாதார வளர்ச்சியானது 7 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
    • 7 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியானது ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்காவதையும் தலா வருமானம் உயருவதையும் குறிக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டு மே 11 அன்று, இந்தியாவினால் வாங்குவதற்கு கையெழுத்திடப்பட்ட 22 அப்பாச்சி வகை பாதுகாப்பு வானூர்திகளில் முதலாவது ஒன்றை இந்திய விமானப் படைக்கு போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது.
    • இந்திய விமானப் படைத் தளபதியான ஏ.எஸ். பூட்டோவா, வானூர்தி வழங்கப்படும் விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில்  மெசாவில் உள்ள போயிங் வானூர்தித் தயாரிப்பு நிறுவனத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்