TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 15 , 2019 1894 days 667 0
  • மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் அவரின் சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
    • இந்தச் சான்றிதழானது மாணவரின் சாதி குறித்த தகவல் இடம்பெற வேண்டிய இடத்தில் “வருமான அதிகாரிகளால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பார்க்கவும்” என்பதைக் கொண்டிருக்கும்.
  • 2017 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கான பணிநிலை ஒதுக்கீட்டினை இரத்து செய்யும் தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கினை 2019 ஆம் ஆண்டு மே 13 அன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
    • புதிய பணிநிலை ஒதுக்கீட்டு கொள்கையின்படி தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமைப் பணிநிலையானது மறுக்கப்படுகின்றது. ஆனால் தரவரிசைப் பட்டியலில் பின்நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமைப் பணிநிலை ஒதுக்கப்படுகின்றது.
  • “தி லான்செட்” என்ற ஒரு மருத்துவப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட முதன்முறையாக இது போன்ற ஒரு ஆய்வின்படி, ஆண்டுதோறும் ஹீமோதெரபி சிகிச்சை தேவைப்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டில் 9.8 மில்லியனிலிருந்து 2040 ஆம் ஆண்டில் 15 மில்லியனாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
    • 2040 ஆம் ஆண்டில் உலகளவில் ஹீமோதெரபி சிகிச்சையானது நுரையீரல் புற்று நோய் (16.4%), மார்பகப் புற்று நோய் (12.7%) மற்றும் மலக்குடல் புற்று நோய் (11.1%) ஆகிய நோய்களுக்குத் தேவைப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • விரிவான அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த அமைப்பின் (Comprehensive Test Ban Treaty Organization - CTBTO) நிர்வாகச் செயலாளர் இந்தியாவை CTBT-ல் பார்வையாளராக செயல்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • இந்த அமைப்பில் பார்வையாளராக இருப்பதனால் சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பிலிருந்து (IMS - International Monitoring System) இந்தியா தகவல்களை அணுக முடியும். IMS ஆனது உலகம் முழுவதும் 337 உணர்விகளைக் கொண்டுள்ளது. இது CTBT விதிமுறைகளை மீறி எந்தவொரு நாட்டினாலும் மேற்கொள்ளப்படும் அணு ஆயுத சோதனையைக் கண்டறியும்.
  • இந்தியாவைச் சேர்ந்த G.S. லட்சுமி என்பவர் ஐசிசி போட்டியின் நடுவர்களுக்கான சர்வதேசக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் நடுவராக உருவெடுத்துள்ளார். இவர் உடனடியாக சர்வதேசப் போட்டிகளில் நடுவராக செயல்பட தகுதி பெறவிருக்கின்றார்.
    • இவர் 2008-09 ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் போட்டியின் நடுவராக செயல்பட்டார். இவர் பெண்களுக்கான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான 3 T20 ஓவர் போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டார். ஆண்களுக்கான ஒரு நாள் போட்டிகளில் இடம்பெற்ற முதலாவது பெண் நடுவராக கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் கிளாரி போலேசாக் உருவெடுத்துள்ளார்.
  • மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், 1967-ன் பிரிவு 3-ன் துணைப் பிரிவுகளான (1) மற்றும் (3)-ன் கீழ் தமிழ்ப் பிரிவினைவாத அமைப்பான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
  • நாசாவின் சந்திரன் ஆய்வுப் பணி விண்கலத்தினால் (Lunar Reconnaissance Orbiter-LRO) எடுக்கப்பட்ட ஒரு படத்தின்படி, நிலா ஆனது சீராகச் சுருங்குகின்றது. எனவே அதனால் நிலவின் மேற்பரப்பு மீது சுருக்கம் மற்றும் நடுக்கங்கள் ஏற்படுகின்றன.
    • நிலவானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான போதிலிருந்து தனது  வெப்பத்தை மெதுவாக இழந்து வருகின்றது. இதனால் கண்டத்திட்டு நகர்வுகள் நிலவில் ஏற்படுகின்றன. இதனால் நிலவின் மேற்பரப்பானது 50 மீட்டர்களுக்கு மேல் சுருக்கம் அடைந்துள்ளது.
  • ரஹிபாய் சோமா போப்ரே குறித்த மூன்று நிமிடம் ஓடக்கூடிய “சீடு மதர்” (Seed Mother) என்ற ஆவணப் படமானது 2019 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட விருக்கின்றது.
    • இவர் மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமமான கொம்பால்னியில் காய்கறிகள், பல்வேறு விதை வகைகள் மற்றும் உள்ளூர் இனங்கள் ஆகியவற்றை விருத்தி செய்வதற்கான தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • அமெரிக்காவின் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான விக்டர் வெஸ்கோவோ என்பவர் புவியின் ஆழமான பகுதியான பசிபிக் கடலின் மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் ஆழப் பகுதியில் 6.8 மைல்களுக்கு (35,853 அடி / 10,928 மீட்டர்கள்) கீழே நீரில் மூழ்கி சாதனை படைத்துள்ளார்.
    • புதிய உயிர் இனங்கள் தவிர, இவர் கடலின் அடிப்பரப்பில் நெகிழிக் கழிவுப் பொருட்களைக் கண்டறிந்துள்ளார். கடலில் 100 மில்லியன் டன்களுக்கு மேலான நெகிழிப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகமானது சென்னை அண்ணா சாலையில் உள்ள துணை நிலையத்தை 33 கிலோ வோல்ட்/11 கிலோ வோல்ட் என்ற அளவில் மேம்படுத்துவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சென்னை நகரத்தின் முதலாவது ஆளில்லா துணை மின் நிலையமாக உருவெடுத்துள்ளது.
    • திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் ஏற்கெனவே ஆளில்லா துணை மின் நிலையங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்