இந்தியா இரண்டு எம்ஐ-24 என்ற தாக்குதல் ரக வானூர்திகளை ஆப்கானிஸ்தானிற்கு வழங்கியது. மேலும் 2 வானூர்திகளை கூடுதலாக இந்தியா அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கவிருக்கின்றது. இந்த வானூர்திகள் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவினால் ஆப்கானிஸ்தானிற்குப் பரிசாக வழங்கப்பட்டன.
ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா பெலாரஸ் நாட்டிடமிருந்து வானூர்திகளை விலைக்கு வாங்கி, அதை ஆப்கானிஸ்தானிற்கு வழங்க ஒப்புக் கொண்டது.
மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தவொரு துணி வகையிலும் பொருத்தப்படக் கூடிய “அணியத்தகு சிறப்புமிகு மின்தேக்கியை” உருவாக்கியுள்ளனர். இதே போன்ற மற்ற சாதனங்களைக் காட்டிலும் இது அதிக அளவிலான மின் ஆற்றலை சேமித்து அந்த ஆற்றலை விநியோகிக்கும்.
இந்த சிறப்புமிகு மின்தேக்கியைப் புவியிடங்காட்டி பொருத்தப்பட்ட சாதனங்களுக்கு மின்சாரம் அளித்தல், LED விளக்கு அல்லது சிறிய மின்னணு சாதனங்களுக்கு மின்சாரம் அளித்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்த முடியும்.
புக்கபாட்னாவில் (தும்கூரு மாவட்டம்) இரண்டாவது சிங்காரா மான் (கெசல்லே பென்னீடி/ சிறுமான் – Chinkara Deer) வனவிலங்கு சரணாலயத்தை உருவாக்கவிருப்பதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா 2016 ஆம் ஆண்டில் பாகல்கோட் மாவட்டத்தில் இவ்வகையிலான முதலாவது வனவிலங்கு சரணாலயத்தை உருவாக்கியது.
சர்வதேச அளவில் சிங்காரா மானின் எண்ணிக்கையில் 60 சதவிகிதத்திற்கும் மேலான அளவில் அந்த இனம் தற்போது மேற்கு இராஜஸ்தானில் காணப்படுகின்றது.
ஆசியாவிலேயே முதல்முறையாக தன்பாலினத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கும் ஒரு மசோதாவை தைவான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா “பிரத்தியேகமான நிரந்தர தம்பதிகளை” உருவாக்குவதற்கு ஒரே பாலினத் தம்பதிகளை அனுமதிக்கின்றது. மேலும் இம்மசோதா இத்தம்பதிகள் “திருமணப் பதிவுகளுக்கு” விண்ணப்பிப்பதற்கும் அனுமதிக்கின்றது.
அண்ணா பல்கலைக் கழகம் தமது பல்கலைக் கழகப் பிரிவுகள், சுயநிதி நிறுவனங்கள் மற்றும் சுயநிதியற்ற பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் பதிவுகளை தேசியப் பாதுகாப்புக் களஞ்சியத்தின் இணைய தளத்தில் பதிவேற்றுவதற்காக தேசியப் பாதுகாப்புக் களஞ்சிய (National Academic Depository - NAD) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
பல்கலைக்கழகம் தற்பொழுது வரை 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பட்டப்படிப்புச் சான்றிதழ்களை NAD இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளது. NAD ஆனது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.
பிரான்சில் உள்ள சிஎன்ஆர்எஸ் ஆராய்ச்சி மையத்தின்படி, 1 எம்பி மின்னஞ்சலை அனுப்புவதற்கு 25 வாட் மின்சாரம் (ஒரு மணி நேரத்திற்கு 25 வாட்) தேவைப்படுகிறது என்றும் 20 கிராம் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகளை உருவாக்குகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களிலிருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வுகளானது 2020 ஆம் ஆண்டில் 4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தானியங்கி தொழிற்துறை (2018 ஆம் ஆண்டில் 8%) மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை (2018 ஆம் ஆண்டில் 2%) ஆகியவற்றைக் காட்டிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையானது அதிக அளவிலான கார்பன் உமிழ்வுகளை ஏற்படுத்த இது வழிவகுக்கும்.
நாட்டிலேயே இது போன்ற நடவடிக்கையில் முதல்முறையாக தேசிய மாணவர் படையைப் போன்றே சட்ட மாணவர் படை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சட்டப் பூர்வக் கல்வியை நிரந்தரப் பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாக ஏற்படுத்துவதன் மூலம், பள்ளி மாணவர்களிடையே, குறிப்பாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே, சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணுகின்றது.