TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2019 1889 days 591 0
  • “சிப்பா” எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை 11 வயதான கன்னி பவார் 19வது நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் வென்றுள்ளார்.
  • முப்படைகளின் கமாண்டோக்களையும் உள்ளடக்கிய நாட்டின் முதல் முப்படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் முதல் தலைவராக மேஜர் ஜெனரல் A.K. திங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான சியட் (CEAT) கிரிக்கெட் தரவரிசையில் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதினை இந்திய அணியின் தலைவரான விராட் கோலியும் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதினை ஸ்மிரிதி மந்தனாவும் வென்றுள்ளனர்.
  • கொரியக் கால்பந்துக் கூட்டமைப்பானது 2023 ஆம் ஆண்டின் ஆசியக் கோப்பைப் போட்டியை நடத்தும் தனது முயற்சியிலிருந்து விலகியதால் மற்றொரு ஒரே ஏலதாரரான சீனாவுக்கு எவ்வித தடையுமின்றி அந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
    • கொரியக் கால்பந்துக் கூட்டமைப்பானது 2023 ஆம் ஆண்டின் பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியை வடகொரியாவுடன் இணைந்து நடத்தும் முயற்சியில் கவனம் செலுத்தவிருப்பதால் தாம் அதிலிருந்து விலகியிருப்பதாகக் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்