H.R. கான் தலைமையின் கீழ் அமைந்த “வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டாளர்களுக்கான கட்டுப்பாடுகள்” என்பதன் மீதான பணிக்குழு தனது அறிக்கையை இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்திடம் சமர்ப்பித்து இருக்கின்றது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற துணை ஆளுநரான H.R. கான் என்பவர் தலைமையில் செபி அமைப்பு இந்த பணிக் குழுவை நியமித்து இருக்கின்றது.
“ஐக்கிய நாடுகள் நீடித்த வளர்ச்சி இலக்குகள் சுகாதாரத் துறையில் 10 மிகவும் செல்வாக்கான நபர்” என்ற விருது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்தியாவின் பதஞ்சலி குழும நிறுவனங்கள் சார்பாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது.
டெல்லியின் துணைநிலை ஆளுநரான அனில் பைஜால் புது தில்லியில் வீர் நாரிகளுக்காக சஹாரா கடற்படை விடுதி ஒன்றைத் துவக்கி வைத்தார். இது வீர் நாரிகள் எனப்படும் கடற்படை வீரர்களின் விதவைகளுக்கான ஒரு புதுமையான விடுதியாகும்.
இது இந்தியக் கடற்படையில் பணியாற்றும் அவர்களின் கணவர்களது எதிர்பாராத விதமான மறைவினையடுத்து வரும் காலகட்டத்தில் கடற்படை வீரர்களின் விதவைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மறுவாழ்விற்கு உதவிட எண்ணுகின்றது.
சீக்கியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக ஐக்கியப் பேரரசின் அரசாங்கம் சமய மற்றும் கலாச்சார விழாக்களின் போது அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் கிர்பன்களை வைத்திருக்கவும் அதை உபயோகப்படுத்தவும் இயலச் செய்யும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி இருக்கின்றது.
ஐக்கியப் பேரரசில் அதிகரித்து வரும் கத்தி சம்பந்தமான குற்றங்களைச் சமாளிப்பதற்கு உதவிடும் “ஆபத்தான (தாக்குதல்) ஆயுதங்கள்” என்ற மசோதாவில் உள்ள ஆபத்தான ஆயுதங்கள் பட்டியலில் இருந்து கிர்பனுக்கு (சிறு கத்தி) விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்கு சதவிகிதம் ஏறக்குறைய சமமாக இருந்தது.
66.79 சதவிகித ஆண்கள் மற்றும் 66.68 சதவிகித ஆண்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
முதல்முறையாக மாதத்திற்கு 45000 ரூபாய் உதவித் தொகையுடனும், 10000 ரூபாய் தங்கும் வசதிக்கான உதவியுடனும் இரண்டு வருட முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய காலத்திற்கான ஒரு உதவித் தொகைத் திட்டத்தை அண்ணாப் பல்கலைக் கழகம் ஆரம்பித்து இருக்கின்றது. மேலும் கூடுதலாக பயணச் சலுகைத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் ஒரு வருடத்திற்கு அளிக்கப்படுகின்றது.
இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு ஏதேனும் ஒன்றில் முனைவர் பட்டத்துடன் கூடிய ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.