பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவாலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடமான “குருநானக் மாளிகையின்” ஒரு பகுதி உள்ளூர் மக்களால் அழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மாளிகையின் புகழ்பெற்ற சாளரங்கள், கதவுகள் மற்றும் காற்றோட்ட அமைப்புகள் ஆகியவற்றை கழற்றி விற்றுள்ளனர்.
16 அறைகள் கொண்ட இந்த மாளிகையின் சுவர்கள் சீக்கிய மதத்தை நிறுவியவரான குரு நானக் சிங்கின் படங்களைக் கொண்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த மன்றம் மற்றும் “புதிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு” ஆகிய அமைப்புகளின் ஆய்வறிக்கையின்படி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 539 மக்களவை உறுப்பினர்களில், 43 சதவிகித உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.
17-வது மக்களவையின் ஒரே சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கர்நாடகாவின் மாண்டியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமலதா அம்பரீஷ் ஆவார்.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) ஜெனீவாவில் சமீபத்தில் நிறைவு பெற்ற 72-வது உலக சுகாதார மாநாட்டின் போது “உடல் சோர்வு” நிலையை ஒரு மருத்துவ நிலைமையாக முதன்முறையாக வகைப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு இதைத் தனது “சர்வதேச நோய்கள் வகைப்பாட்டுப்” பட்டியலில் இணைத்துள்ளது.
WHO ஆனது உடல் சோர்வு என்பதை வெற்றிகரமாக நிர்வகிக்கப்படாத, பணியிடத்தில் உருவாகும் நீண்ட நேர பணிச் சுமை அழுத்தத்தினால் உருவாகும் ஒரு நோய் என்று வகைப்படுத்தியுள்ளது.