யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வின்படி இந்திய அரசின் தூய்மை இந்தியா (கிராமம்) திட்டமானது நிலத்தடி நீருடன் மாசு கலப்பதைக் குறைக்க உதவியுள்ளது எனக் கண்டறிந்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய்க்கானப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
8-வது பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியானது பிரான்சில் தொடங்கியது. இதன் முதல் உலகக் கோப்பைப் போட்டியானது 1991 ஆம் ஆண்டு சீனாவில் நடத்தப் பட்டது.
அமெரிக்காவின் பெண்கள் கால்பந்து அணியானது இந்தப் போட்டிகளில் நான்கு முறை வெற்றிப் பெற்று மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.
டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்கான முயற்சியில் RBI ஆனது RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணத்தையும் விதிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்க வேண்டியது அவசியமாகும்.