இலங்கையின் இரண்டு முஸ்லீம் ஆளுநர்கள், அமைச்சரவையில் கேபினெட் நிலையில் உள்ள 4 அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து 9 முஸ்லீம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து பதவி விலகியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதிலிருந்து முஸ்லீம் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்படுவதற்கு எதிராக இவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் உருவெடுத்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அணித் தலைவரான ஏபி டி வில்லியர்ஸை முந்தியுள்ளார். கெயில் தற்போது வரை 39 சிக்சர்களை அடித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது நிரம்பிய குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து (கத்துவா கூட்டுப் பாலியல் வழக்கு), அந்தக் குழந்தையைக் கொன்ற மூன்று முக்கியக் குற்றவாளிகளுக்கு ரன்பீர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று காவல் துறை அதிகாரிகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
ரன்பீர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மட்டுமே காஷ்மீர் மாநிலத்தில் செல்லுபடியாகும். இது 1932 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. டோக்ரா அரச வம்சத்தின் ஆட்சியாளரான, ரன்பீர் சிங்கின் நினைவாக இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி எந்தவொரு குறைந்தபட்ச அளவிலான பணத்தையும் வங்கிக் கணக்கில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் அடிப்படை வங்கிச் சேவைகளை அளிக்கும் “கட்டணமில்லாத வங்கிக் கணக்கு” வைத்துள்ளவர்களுக்கு
காசோலை வசதி மற்றும் இதரச் சேவைகளை அளிக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அடிப்படைச் சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு (BSBD - Basic Savings Bank Deposit) என்பது மேற்குறிப்பிட்டுள்ளது போன்ற வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சில வசதிகளை இலவசமாக வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான வீரேந்திர குமார் பொறுப்பேற்கவிருக்கின்றார். இவர் மத்தியப் பிரதேசத்தின் திகம்கார்க் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.