2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது அங்குள்ள நவகாட் மற்றம் கோர்கா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வீடுகளை மறுகட்டமைப்பதற்காக அங்கு வாழும் 50,000 மக்களுக்கு உதவுவதற்காக 1.6 பில்லியன் நேபாள ரூபாய் மதிப்பிலான நிதியுதவியை நேபாள நாட்டிற்கு இந்தியா நீட்டித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தாவர்சந்த் கெலாட் பிஜேபியின் நாடாளுமன்றக் கட்சிக்கான மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் பிஜேபியின் நாடாளுமன்றக் கட்சிக்கான துணைத் தலைவராக மத்திய இரயில்வே மற்றும் வணிகத் துறை அமைச்சரான பியுஷ் கோயல் செயல்படவிருக்கின்றார்.
மக்களவையில் பிஜேபி கட்சியின் தலைவராக நரேந்திர மோடி பணியாற்றுகின்றார். இக்கட்சியின் துணைத் தலைவராக ராஜ்நாத் சிங் செயல்படவிருக்கின்றார்.
மிகக் கடுமையான சூறாவளிப் புயலான “வாயுப் புயல்” குஜராத் கடற்கரையோரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் புயலின் பெயரான “வாயு” என்பது இந்தியாவினால் பெயரிடப்பட்டது. கஜா புயல் இலங்கையினால் பெயரிடப்பட்டுள்ளது. ஒக்கி மற்றும் பானி புயல்கள் வங்க தேசத்தினால் பெயரிடப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.
தற்பொழுது கிராமப்புறக் குடும்பங்களில் 18 சதவிகிதத்தினர் மட்டுமே குழாய் மூலமான குடிநீரைப் பெறுகின்றனர்.
மூத்த இந்தியக் காவல் துறை அதிகாரியான VS கமுதி என்பவர் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (BPR&D - Bureau of Police Research and Development) பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பு 1970 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது நாட்டில் காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்குப் பரிந்துரைகளை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்கின்றது.
நிர்பேந்திர மிஸ்ரா மற்றும் பிகே மிஸ்ரா ஆகியோர் முறையே முதன்மைச் செயலாளர் மற்றும் கூடுதல் முதன்மைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக் காலத்தோடுப் பொருந்திப் போகும் வகையில் இவர்களது நியமனங்கள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன. இவர்களுக்கு கேபினெட் அமைச்சர்களுக்கான தகுதிநிலை வழங்கப்பட விருக்கின்றது.
உலக வங்கி வரையறையின்படி தனி நபர் தலா வருமானம் 2,000 டாலர்கள் என்ற மதிப்புடன் கீழ்நிலையில் உள்ள நடுத்தர வருமானம் ஈட்டும் நாடு இந்தியா வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.
தானியங்கி பணமளிப்பு இயந்திரம் மூலம் வங்கிகளுக்கு இடையேயான பரிமாற்றக் கட்டண அமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய வங்கிகள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜி கண்ணன் தலைமையில் 6 நபர்கள் கொண்ட ஒரு குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
இது வங்கிச் சேவை இல்லாத பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களை அமைப்பதற்கு ஊக்கம் அளித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாராக் கடன் சொத்துக்களை ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்காக பிஎன்பி வங்கித் தலைவரான சுனில் மேத்தா தலைமையிலான குழுவினால் பரிந்துரை அளிக்கப்பட்டும் இந்திய ரிசர்வ் வங்கியினால் ஆதரிக்கப்பட்டும் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு “சசாக்த் திட்டம்” என்று பெயரிடப்பட்டு இருக்கின்றது.
நீண்ட காலமாக பதவியிலிருந்த கஜகஸ்தானின் முன்னாள் அதிபர் நுர்சுல்தான் நசர்பயேவ் என்பவரையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக ஜோமார்த் டோக்காயேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்திலிருந்து கஜகஸ்தான் பிரிந்ததிலிருந்து 2019 ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து விலகும் வரை அவர் அந்நாட்டினை ஆட்சி செய்து வந்தார்.