TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 14 , 2019 1996 days 833 0
  • மத்திய அமைச்சரவை “ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2019” என்பதனை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • “இந்த மசோதா ஆதார் சட்டத்தை வலுப்படுத்துவதையும் நீதியரசர் B.N. கிருஷ்ணா குழுவின் பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • மத்திய அமைச்சரவை இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்தம்) மசோதா, 2019 என்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இது நாட்டில் மருத்துவக் கல்வி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் அர்ஜீன் முண்டா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக மின்னணு முறையிலான நிர்வாக (e-governance) முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளார்.
    • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சிறப்பான மின்னணு முறையிலான நிர்வாகத்தைக் கொண்டு வருவதற்காக “நேரடிப் பயன் பரிமாற்றப் பழங்குடியினர்” மற்றும் “அரசு சாரா அமைப்பு வழங்கும் நிகழ்நேர செயலி மற்றும் பின்தொடர் அமைப்பு “ என்ற நிகழ்நேரத் தளங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
  • “ப்ளைக்ஸ்கேம்” (Flygskam) என்ற சொல்லானது ஸ்காண்டிநேவியன் நாடுகள் மற்றும் உலக நாடுகளில் இளம்பருவ சுற்றுச்சுழல் ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் என்பவரின் முயற்சியால் புகழ்பெற்று விளங்குகின்றது.
    • இது விமானத் தொழிற்துறையினால் ஏற்படும் அதிகப்படியான மாசுபாடு காரணமாக மக்கள் விமானப் போக்குவரத்தைத் தவிர்த்து இரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.
  • இந்திய வாகனக் கூட்டமைப்புச் சமூகம் (Society of Indian Automobile Association - SIAM) 2023 ஆம் ஆண்டில் மின்சாரம் அல்லாத மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையையும் 2025 ஆம் ஆண்டில் 150சிசிகும் குறைவாக உள்ள இரு சக்கர வானங்களின் விற்பனையையும் தடை செய்யும் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்துள்ளது. இது குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்த முடியாதவை என்றும் நடைமுறைக்கு உகந்தவை அல்ல என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
  • மத்திய நீர் ஆணையம் (CWC - Central Water Commission) மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக ஆந்திரப் பிரதேச அரசின் கோதாவரி-பெண்ணாறு நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
  • நீதியரசர் ஆதர்ஷ் குமார் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) உணவுப் பொருட்களை நெகிழிப் பொருட்களால் கட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு மேலும் விதிமுறைகள் தேவையா என்பது குறித்து விசாரிப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவானது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India), இந்தியத் தரங்கள் அமைப்பு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் ஆகியவற்றிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடார் காடுகளை “வாழும் அமைப்புகளாக” அங்கீகரித்துள்ளது. இந்த நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் தற்பொழுது காடுகளை சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
  • அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் – 2019 அறிக்கையின்படி, கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி ஊதியம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 127 மில்லியன் டாலருடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
    • இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய விளையாட்டு வீரர் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார். இவர் இந்தப் பட்டியலில் 100-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த ஊதியம் 25 மில்லியன் டாலர்கள் ஆகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 356(4)-ன் கீழ் ஜம்மு காஷ்மீரில் அடுத்த 6 மாத காலத்திற்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கின்றது.
    • ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானம் வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப் படவிருக்கின்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள நிதியை மத்திய அரசிற்கு வழங்குவதற்கு வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட பீமல் ஜலன் தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கிக் குழு (இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்) தமது உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • முதலில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கவிருந்தது.
  • இந்தியாவில் இரயில் நிலைய வளர்ச்சித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக இந்திய இரயில் நிலைய வளர்ச்சிக் கழகம் (IRSDC - Indian Railway Station Development Corporation) பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF - French National Railways) மற்றும் AFD என்ற நிறுவனம் ஆகிவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • 245 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தில்லி – சண்டிகர் பெருவழிப் பாதையில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இரயிலை இயக்குவதற்கான வேக மேம்பாட்டு ஆய்வு, லூதியானா மற்றும் அம்பாலா இரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் ஆகியவை இதற்கு முன்பு பிரெஞ்சு உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.
  • வியாபாரக் குறியீட்டுப் பாகுபாட்டு நிறுவனமான டீஅர்ஏ ஆராய்ச்சி அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் நம்பிக்கை பெற்ற குறியீட்டு நிறுவனமாக “டெல்” நிறுவனம் உருவெடுத்துள்ளது.
    • வாகன நிறுவனமான ஜீப், எல்ஐசி, அமேசான், ஆப்பிள் ஆகியவை முறையே 2, 3, 4, மற்றும் 5-வது இடங்களில் மிகவும் நம்பிக்கை பெற்ற நிறுவனங்களாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்