அமெரிக்காவிற்குப் பதிலடி தரும் விதமாக வாதுமைக் கொட்டை, கொண்டைக் கடலை, வங்கப் பயிறு, மசூர் பருப்பு, போரிக் அமிலம், ஆப்பிள்கள் போன்ற 29 அமெரிக்கப் பொருட்களின் மீது சுங்க வரியை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த சுங்க வரி அமெரிக்காவின் மீது 220 – 290 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தெப், மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளரான R.D. பர்மன் என்பவரின் பணியை அடையாளப் படுத்திக் காட்டுவதற்காக தன்னுடைய மாநிலத்தில் ஒரு அருங்காட்சியகம் கட்டமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
டானிஷ் (டென்மார்க்) ஆர்க்டிக் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆர்க்டிக் கண்காணிப்பு இணையதளமான துருவ இணையதள வாயில் (POLAR) கிரீன்லாந்தில் வருடாந்திரப் பனி உருகும் காலநிலையானது 2019 ஆம் ஆண்டில் மிக முன்னதாகவே தொடங்கி விடும் என்று கூறியிருக்கின்றது.
ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியின் காரணமாக ஒரே நாளில் 2 பில்லியன் டன்கள் அளவிலான பனியை கிரீன்லாந்து இழந்துள்ளது.
இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2010 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தாவரவியலாளர்கள் மற்றும் வகைப்பாட்டியல் வல்லுநர்கள் கிழக்கு இமயமலையில் உள்ள சில வகை மரங்களிலிலுருந்து கசியும் நறுமணப் பொருட்களின் 23 புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பொலிவான அழகு வாய்ந்த பூக்களின் காரணமாக இந்தத் தாவரக் குழுக்கள் தோட்டக்கலை முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
மத்திய அமைச்சரவை புதுதில்லி சர்வதேச நடுவர் தீர்ப்பு மையம், 2019 (New Delhi International Arbitration Centre - NDIAC) என்ற ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது நிறுவன விவகாரங்களைத் தீர்ப்பதற்காக ஒரு தனிச் சுதந்திர மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்பினை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கின்றது.
இராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் 2019 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா பட்டம் சுமத்தப் பட்டு இருக்கின்றார்.
633க்கும் அதிகமான ஸ்கூபா எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் நீருக்கடியில் மிகப்பெரிய அளவிலான தூய்மைப் பணியை மேற்கொண்டு உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கி பணம் விநியோகம் செய்யும் இயந்திரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்களை சரியான சுவர், தூண் அல்லது அறையைக் கொண்டதாக (அதிகப் பாதுகாப்பு கொண்ட விமான நிலையங்கள் போன்ற இடங்களைத் தவிர) மாற்றியமைக்க வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.