மகாராஷ்டிராவின் நாசிக் நகர காவல்துறையானது பெண்களைத் துன்புறுத்துதல் மற்றும் கேலி செய்தல் போன்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக “நிர்பயா படையை” அமைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை (358) அடித்த வீரராக ரோஹித் ஷர்மா உருவெடுத்துள்ளார்
இவர் இந்தச் சாதனையைப் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் புரிந்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது முதல்முறையாக 2 பெண் ஆராய்ச்சியாளர்களை சந்திரனுக்கான இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திரயான் -2 திட்டத்திற்குத் தலைமை தாங்க நியமித்துள்ளது.
ரிது கரிதால் இத்திட்டத்தின் பணி இயக்குநராகவும் முத்தையா வனிதாஇதன் திட்ட இயக்குநராகவும் பணியாற்றுவார்.
உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளராக தென்னாப்பிரிக்காவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் உருவெடுத்துள்ளார்.
இவர் இச்சாதனையை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் புரிந்தார்.
நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக “பிங்க் சாரதி” எனும் வாகனங்களை கர்நாடகா அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பெட்டுல் மாவட்டதில் உள்ள பாஞ்சா எனும் கிராமமானது இந்தியாவின் விறகு அடுப்புகளற்ற மற்றும் ஏறக்குறைய LPG எரிவாயு உருளைகற்ற கிராமமாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள 75 வீடுகளும் தங்கள் சமையல் தேவைகளுக்குச் சூரிய சக்தி அடுப்புகளையேச் சார்ந்துள்ளனர்.
நாகாலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான “சுகோயு பள்ளதாக்கு” ஆனது உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு “நெகிழிகளற்ற மண்டலமாக” அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க மக்களவைக்குத் தலைமை தாங்கிய முதல் தெற்காசிய அமெரிக்கப் பெண்மணி எனும் பெருமையை இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான பிரமிளா ஜெயபால் பெற்றுள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றமானது ஹரியானாவில் உள்ள அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போன்று சட்ட உரிமைகளுக்கு தகுதியான சட்டப்பூர்வமான நபர்கள் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவானது ஹரியானா மாநிலத்திற்கு எதிரான கர்னைல் கிங் மற்றும் பலரின் வழக்கில் வழங்கப்பட்டது.