“ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்” என்ற திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் அடுத்த திருத்தத்தை செயல்படுத்துதலுக்கான நடைமுறை மற்றும் செயல்முறைகள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைத்துள்ளார்.
அசாம் மாநிலப் போக்குவரத்துக் கழகமானது பயணிகளுக்கான பலதொகுதி மாதிரிப் பயணத் திட்டம் மற்றும் பேருந்துகளின் இருப்பிடம் குறித்த நிகழ்நேரத் தகவல் ஆகியவற்றை வழங்கவிருக்கும் “சலோ செயலி” என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹிரோசிமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு புதிய வகை குளிரூட்டும் உடையை உருவாக்கியுள்ளனர். இது அதிகமான வியர்வையை உண்டாக்கும் கோடைக் காலங்களில் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும்.
உடலின் வெப்ப நிலை மிக அதிக அளவுக்கு உயரும் போது நீர்ச்சத்துக் குறைவு, உடல் செயல்பாட்டுக் குறைவு மற்றும் மூளை செயல்பாட்டுக் குறைவு ஆகியன ஏற்படும் அபாயம் உள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலண்டனில் 2019 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சிக்கான காமன்வெல்த் பொதுச் செயலாளரின் புத்தாக்க விருதினை இந்தியப் பொறியாளரான நிதீஷ் குமார் ஜாங்கீர் பெற்றுள்ளார்.
இவர் குறைமாதக் குழந்தைகளுக்காக “சான்ஸ்” என்ற குறைந்த செலவு கொண்ட சுவாசத்திற்கு உதவும் கருவியைக் கண்டுபிடித்ததற்காக “மக்கள் பிரிவில்” இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இணைய தளத்தைப் பயன்படுத்தி இணையதளப் பொருட்களுக்கான சாதனங்கள் மற்றும் கட்டமைப்பு மேலாண்மைக்கு தரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச இணையதள அமைப்பான நியமிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையதளக் குழுமமும் (Internet Corporation for Assigned Names and Numbers - ICANN) இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறைக்கான தலைமை அமைப்பான நாஸ்காம் அமைப்பும் இணைந்துள்ளதாக அந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.