மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மத்திய இணையமைச்சர் சூரிய / காற்றாலைத் துறைக்கான பிரச்சனைக்குத் தீர்வு காணும் குழுவினை (Dispute Resolution Committee - DRC) அமைப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது காற்றாலை / மின் ஆற்றல் உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய சூரிய ஒளி ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India - SECI) அல்லது தேசிய அனல் மின் நிறுவனம் ஆகியோர்களுக்கிடையே ஒப்பந்த உடன்படிக்கைகளுக்கு அப்பால் ஏற்படும் எந்தவொரு எதிர்பாராத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.