TNPSC Thervupettagam

`TNPSC துளிகள்

June 22 , 2019 1856 days 663 0
  • அடித்தட்டுப் பயனாளர்களுக்கு தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசானது அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தின் முக்கியத் தொடர்புடைய மருத்துவமனைகளில் 18 அம்ரித் கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
    • மலிவு விலை மருந்துகள் மற்றும் நம்பகமான உள்வைப்புகள் (Affordable Medicines and Reliable Implants for Treatment-AMRIT) மருந்தகங்களானது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
  • அசாமில் உள்ள CSIR-NEIST பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் குழுவானது புற்றுநோய் செல்களைக் கண்டறிய உதவும் வகையில் “தூய்மையற்ற” நிலக்கரியை உயிரி மருத்துவப் புள்ளியாக மாற்றும் ஒரு வேதியியல் செயல்முறையை உருவாக்கியுள்ளது.
  • தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவானது பள்ளிக் குழந்தைகளுக்கான தேசிய யோகாப் போட்டிகளின் நான்காவது பதிப்பை ஏற்பாடு செய்திருந்தது.
    • 2016 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த போட்டியானது அறிவியல் பூர்வமான மற்றும் முழுமையான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • முன்பு SKS சிறு கடன் நிறுவனமென்று அறியப்பட்ட இந்தியாவின் முன்னணி சிறு கடன் நிறுவனமான BFIL நிறுவனத்தை இண்டஸ்இந்த் வங்கியானது வாங்கியுள்ளது.
    • தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயமானது இந்த இணைப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்து ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்