TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 23 , 2019 1855 days 660 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சூரிய ஒளியினால் செயல்படக்கூடிய முதலாவது கடல் படகு கேரள மாநில நீர்ப் போக்குவரத்துத் துறையினால் (State Water Transport Department - SWTD) ஆழப்புலாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
    • இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் SWTD துறையானது “ஆதித்யா” என்ற இந்தியாவின் சூரிய ஒளியினால் செயல்படக்கூடிய முதலாவது படகினை அறிமுகப்படுத்தியது.
  • உலக சுகாதார அமைப்பினால் (World Health Organization - WHO) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் ஆசியாவைச் சேர்ந்த 4 நாடுகள் (சீனா, ஈரான், மலேசியா மற்றும் தைமூர் லெஸ்டி) மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த எல் சல்வேடார் ஆகிய நாடுகளில் மலேரியா நோய் பதிவு செய்யப்படவில்லை.
  • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை (தொடர்ந்து 3 விக்கெட்டுகளை) வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்து வீச்சாளர் என்ற சாதனையினை முகமது சமி நிகழ்த்தியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
    • 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய முதலாவது இந்திய வீரர் சேத்தன் சர்மா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்