2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சூரிய ஒளியினால் செயல்படக்கூடிய முதலாவது கடல் படகு கேரள மாநில நீர்ப் போக்குவரத்துத் துறையினால் (State Water Transport Department - SWTD) ஆழப்புலாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் SWTD துறையானது “ஆதித்யா” என்ற இந்தியாவின் சூரிய ஒளியினால் செயல்படக்கூடிய முதலாவது படகினை அறிமுகப்படுத்தியது.
உலக சுகாதார அமைப்பினால் (World Health Organization - WHO) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் ஆசியாவைச் சேர்ந்த 4 நாடுகள் (சீனா, ஈரான், மலேசியா மற்றும் தைமூர் லெஸ்டி) மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த எல் சல்வேடார் ஆகிய நாடுகளில் மலேரியா நோய் பதிவு செய்யப்படவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை (தொடர்ந்து 3 விக்கெட்டுகளை) வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்து வீச்சாளர் என்ற சாதனையினை முகமது சமி நிகழ்த்தியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய முதலாவது இந்திய வீரர் சேத்தன் சர்மா ஆவார்.